விருச்சிகம்: பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிக்கும் திறமை பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் இழுபறியாக பாதியில் நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். விரும்பிய காரியத்தை நிறைவேற்ற தேவையான மனோ பலம் உண்டாகும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும்.புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும்.
தொழில் வியாபாரத்தில் சிறு தடங்கல்கள் சந்திக்க நேரும். எதிர்பார்த்த பணம் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள் நல்லபலன் தரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சிலர் புதியவேலைக்கு முயற்சி மேற்கொள்வார்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள்.
கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.
மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். புதிய வகுப்புகளில் சேர ஆர்வம் காட்டுவீர்கள்
பரிகாரம்: அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்க கஷ்டங்கள் நீங்கி சுகம் உண்டாகும். வாழ்க்கை வளம் பெறும்.