மகரம்: அடுத்தவர் யாரும் குறை கூறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் பணவரத்து, காரிய தடை நீங்கும். மனதில் ஏதாவது கவலை தோன்றும், பய உணர்வு உண்டாகும். தூக்கம் குறையலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அடுத்தவருடன் பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.
தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள்.
குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர் மூலம் நன்மை ஏற்படும். பிள்ளைகள் எதிர் காலம் குறித்து சிந்தனை மேலோங்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிடைக்கும்.
பெண்கள் திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும்.
மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும்.
பரிகாரம்: அம்மன் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட துன்பங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.