Horoscope : கன்னி ராசிக்கான இந்த வார ராசி பலன்கள் | மார்ச் 21 முதல் மார்ச் 27 வரை

Horoscope : கன்னி ராசிக்கான இந்த வார ராசி பலன்கள் | மார்ச் 21 முதல் மார்ச் 27 வரை

கன்னி

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Weekly prediction March 21, 2021 - March 27, 2021

  • Share this:
    கன்னி: தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயலாற்றும் கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் பயணங்களால் நன்மை உண்டாகும்.

    மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை.

    தொழில் வியாபாரம் சீராகும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். போட்டிகள் குறையும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றியை பெறுவார்கள். சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள்.

    குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மீது பாசம் அதிகரிக்கும். அவர்களுடன் இனிமையான பேசி பொழுதை கழிப்பீர்கள்.

    பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும்.

    மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும்.

    பரிகாரம்: முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்சனைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி
    Published by:Ram Sankar
    First published: