விருச்சிகம்: தகுந்த நேரத்தில் தகுந்த முடிவுகளை அனைவருக்கு ஏற்றார் போல் எடுக்கும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் அனைத்து சங்கடங்களும் விலகி நல்ல பலன்களை அடைவீர்கள். உங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். வாகனம் வாங்கும் திட்டம் நினைத்தபடி நடக்கும்
தொழிலதிபர்களுக்கு வரவும் செலவும் சரிசமமாக இருக்கும். உற்பத்தி பெருகும். வியாபாரிகளுக்கு போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள். வியாபாரம் பெருகும்.
உத்யோகஸ்தர்களுக்கு பணிச்சுமை கூடும். மேலதிகாரிகளின் தயவும் பாராட்டும் உண்டு.
குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளது. பிள்ளைகளால் நன்மையுண்டு. பிள்ளைகளுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் தேடிவரும். வரன் தேடுவோருக்கு நல்ல வரன் வந்து சேரும்.
பெண்களுக்கு குடும்பத்தில் ஆரோக்கியம் கூடுதலாகும். உங்களைப் பிரிந்திருந்த உறவுகள் வந்துசேர்வார்கள். சில இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடு செல்வார்கள்.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் மந்தநிலை மாறும்.
பரிகாரம்: மகாலட்சுமியை தீபம் ஏற்றி வழிபட்டு வர செல்வம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.