துலாம்: அனைவரையும் ஆதிக்கமாக கொண்டு செல்லும் துலாம் ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். உற்றார்-உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு தொலைதூரங்களிலிருந்தும் நல்ல செய்திகள் வரும்.
தொழிலதிபர்கள் தங்கள் தொழிற்சாலை நடவடிக்கைகளை நேரடியாக கவனித்தால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். வியாபாரிகள் அதிக கொள்முதல் செய்யாமல் இருப்பது நல்லது.
உத்யோகஸ்தர்களுக்கு நினைத்த இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வந்துசேரும். பணியில் தடை ஏற்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேர்வார்கள்.
குடும்பத்தில் வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும். விலகியிருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். காலங்காலமாய் இருந்துவந்த பங்காளி சண்டை முடிவுக்கு வரும்.
பெண்கள் முக்கிய பிரச்சினைகள் காரணமாக வெளியூர் சென்றுவர வேண்டியிருக்கும்.
மாணவர்கள் கல்வியில் ஊக்கம் பெறுவார்கள். பிடித்தவற்றை கற்றுக் கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.
பரிகாரம்: முருகனை வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும்.