சிம்மம்: அனைவரிடமும் பாசமாக இருக்கும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் புதிதாகத் திருமணமான தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். அவர்களுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மாறும். மனதில் உற்சாகம் பெருகும். உதவி செய்யாத சகோதரர்கள் முன்வந்து உதவுவார்கள்.
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குக் கடந்த காலங்களில் இருந்து வந்த தடைகள், போட்டிகள், முன்னேற்றமற்ற நிலை போன்ற யாவும் விலகி நல்ல மேன்மை உண்டாகும். லாபத்தையும் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்குக் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தக்க சமயத்தில் அமைந்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.
குடும்பத்தில் பொருளாதாரநிலை சிறப்பாக அமைவதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். கடன்கள் அனைத்தும் குறையும்.
பெண்கள் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். கணவர் மற்றும் புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.
மாணவ- மாணவியர் கல்வியில் நல்ல மேன்மையான நிலைகள் உண்டாகும். கல்விக்காக எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் வெற்றி கிட்டும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப்பெறும்.