Horoscope : கன்னி ராசிக்கான இந்த வார ராசி பலன்கள் | மார்ச் 14 முதல் மார்ச் 20 வரை

Horoscope : கன்னி ராசிக்கான இந்த வார ராசி பலன்கள் | மார்ச் 14 முதல் மார்ச் 20 வரை

கன்னி

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Weekly prediction March 14, 2021 - March 20, 2021

  • Share this:
    கன்னி: எப்பவும் உற்சாகமாக இருக்கும் கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் பயணம் செல்ல நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டாகும்.  மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். வாழ்க்கை துணை  மூலம் லாபம் கிடைக்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள். உங்கள் மீது  குற்றம் சொல்ல நினைப்பவர்கள் அதனை விட்டுவிடுவார்கள்.

    தொழிலதிபர்கள் தொழிலாளிகளின் ஒற்றுமையால் இரண்டு பங்கு லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளின் கடன்  பாக்கிகள் வசூலாகி, வியாபாரமும் லாபத்தோடு நடக்கும்.

    உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளின் அரவணைப்பையும் பாராட்டையும் பெறுவார்கள். உடன் பணிபுரியும் பெண்  ஊழியர்களிடம் எச்சரிக்கை தேவை.

    குடும்பத்தில் எதிர்ப்புகள் விலகும். உடன்பிறந்த சகோதரர்கள், உங்கள் பேச்சைமீறி நடக்கலாம். சொத்துப்பிரச்சினை  வரும். உற்றார்-உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள்.

    பெண்களுக்கு பணப்புழக்கம் கூடும். அரசியல்வாதிகள் பொதுமக்களிடையே நல்ல பெயர் எடுப்பார்கள்.

    மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள். நீண்ட நாளைய நண்பரைப் பிரிய வேண்டி வரலாம்.

    பரிகாரம்: அம்மனை தீபம் ஏற்றி வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்
    Published by:Tamilmalar Natarajan
    First published: