• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஆன்லைனில் பார்க்கலாம்...எப்படி?

கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஆன்லைனில் பார்க்கலாம்...எப்படி?

பால கிருஷ்ணன்

பால கிருஷ்ணன்

சென்னை 'இஸ்கான்' சார்பில் நடத்தப்படும் இரண்டு நாள் கிருஷ்ண ஜெயந்தி விழாவை'ஆன்லைன்' வாயிலாக கண்டுகளிக்கலாம்.

  • Share this:
    மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். அதுவே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆவணி மாதத்தில் வரக்கூடிய அஷ்டமி திதி அன்று கிருஷ்ணர் அவதரித்த நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆவணி 14, ஆகஸ்ட் 30ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் அவதரித்ததாக அஷ்டமி திதி தொடங்கும் ஆகஸ்ட் 30ம் தேதி தமிழகத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதே சமயம், கிருஷ்ணர் இரவில் தான் பிறந்தார் என்பதால் வட இந்தியர்கள் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயரில் இரவில் பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    தற்போது கொரோனாவாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் கோவிகளுக்கு செல்வதில்லை. ச்துமட்டுமல்லாமல் சில முக்கியமான பெரிய கோவிகளும் திறப்பதில்லை. இதே போல் கடந்த வருடமும் கொரோனாவால் கிருஷ்ண ஜெயந்தி விமர்சையாக கொண்டாடப்படவில்லை. அதனால் மக்கள் வீட்டிலேயே எளிமையாக கொண்டாடி மகிழந்தனர்.

    அதனால் இந்த வருடமும் வீட்டிலேயே கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் மக்கள், கோவிகளிலும் அங்காங்கே நடத்தப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஆன்லைன் வாயிலாக காண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை 'இஸ்கான்' சார்பில் நடத்தப்படும் இந்த இரண்டு நாள் கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஆன்லைன் வாயிலாக கண்டுகளிக்கலாம்.

    இஸ்கான் எனப்படும் கிருஷ்ண பக்தி இயக்கம்சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடத்தப்படுகிறது. நாடு முழுதும், நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இஸ்கான் சார்பில், இரண்டு நாட்கள் விழா நடக்கிறது. சென்னையில் நாளை காலை 10:00 மணி முதல் நாம சங்கீர்த்தனம், நடக்கிறது. இரவு 10:30 மணிக்கு ராதா கிருஷ்ணனுக்கு அபிஷேகம் நடக்கிறது.

    மேலும் படிக்க... 8 வகை கிருஷ்ணரின் புகைப்படங்கள்...

    அதைத் தொடர்ந்து, கிருஷ்ணரின் தெய்வீக தோற்றத்தை நினைவு கூரும் தரிசனம், ஆரத்தி நடக்கிறது. வரும் ஆக., 31ம் தேதி இஸ்கான் சார்பில் உலகம் முழுதும் நிறுவனர் ஆச்சார்யாவின் 125வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று அபாயம் காரணமாக, இந்தாண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழா, ஆன்லைன் வாயிலாக, நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    விழாவை, https://www.youtube.com/c/iskconchennai என்ற இணையதள முகவரியில் கண்டுகளிக்கலாம். கிருஷ்ண ஜெயந்தி விழா குறித்த முழு தகவல்களும், http://www.iskconchennai.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இதனை கோவில் தலைவர் சுமித்ரா கிருஷ்ண தாஸ் கூறியுள்ளார்.

    மேலும் படிக்க... ஆரோக்கியமாக இருக்க வாஸ்துப்படி சமையலறையை இந்த திசையில் வையுங்கள்...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: