ஏழு ஜென்ம பாவங்களை போக்க வேண்டுமா? அப்போ உடனே இதை செய்யுங்கள்!

பச்சரிசியை உண்ணும் எறும்புகள்

ஒருவர் ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் என அனைத்தும் தீருவதற்கு, சனிக்கிழமையன்று இதை தவறாவமல் செய்ய வேண்டும்.

  • Share this:
    ஒருவர் ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,
    இந்த தலைமுறையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் என அனைத்தும் தீருவதற்கு சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப் போட வேண்டும்.

    அதை எறும்பு தூக்கிச் செல்லும். அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். அப்படித் தூக்கிச் சென்ற பச்சரிசியை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசியின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும். இந்த பச்சரிசியை சாப்பிடுவதற்கு அவை இரண்டேகால் வருடங்கள் எடுத்துக்கொள்ளும். இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள் என்பது நம்பிக்கை.

    மேலும் படிக்க... இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 09, 2021)

    இந்நிலையில் இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும். அப்படி மாறியதும், அதன் வலு இழந்துபோய்விடும். இதனால், நாம் அடிக்கடி பச்சரிசியை எறும்புக்கு உணவாகப்போ டவேண்டும். ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். இதனால், சனிபகவானின் தொல்லைகள் கூட நம்மைத் தாக்காது.

    பச்சரிசி


    மேலும் படிக்க... ஆடி அமாவாசை - தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்

    இதில் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டசனி , அர்த்தாஷ்டம சனி என சனி தோஷங்கள் அனைத்தும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமலும், கெடுபலன் கொடுக்காமலும் இருக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள் எறும்புகளுக்கு அவ்வப்போது தேவையான அரிசி மற்றும் சில உணவு வகைகளை தூவி விடுவார்கள். அத்துடன் பச்சரிசி மாவில் கோலமிடுவதால் எறும்புக்கும் பூச்சிகளுக்கும் உணவாக அமைகிறது என்பது காஞ்சி மகாபெரியவாவின் கூற்று. இதனை இன்றும் நமது கிராம புறங்களில் உள்ள பெண்கள் செய்து வருகின்றனர்.

    மேலும் படிக்க... கருங்கல்லில் தெய்வ சிலைகளை வடிப்பதற்கு காரணம் இதுதான்...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: