Rasi Palan : விருச்சிகம் - இந்த வார ராசிபலன் (ஜுலை 25முதல் ஜுலை 31வரை)

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை): வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்ட நஷ்டங்களை  அனுபவமாக  எடுத்துக் கொள்ளும் திறமை உடைய விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். தொல்லைகள் தீரும். மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.  பணவரத்து தாமதப்படும். வீண் ஆசைகள் உண்டாகலாம் கவனம் தேவை.

    குடும்பத்தில் இருந்த  பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.  பிள்ளைகள் விஷயத்தில் கவனமும், அனுசரணையும் இருப்பது நல்லது. உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.

    தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.  எதிர்பார்த்த ஆர்டர்கள், சரக்குகள் வருவதிலும் தாமதம் உண்டாகலாம்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு  செயல்படுவதை தவிர்ப்பது நல்லது.  மேல் அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும்.

    மாணவர்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

    பரிகாரம்: புதன்கிழமையில் பெருமாளை வணங்கி புளியோதரை விநியோகம் வழங்க மனதெளிவு உண்டாகும். அறிவு திறன் அதிகரிக்கும்.
    Published by:Vaijayanthi S
    First published: