புதன்கிழமையன்று தடைகளை விலக்கும் விநாயகர் பாடல்களை கேளுங்க...
புதன்கிழமையன்று தடைகளை விலக்கும் விநாயகர் பாடல்களை கேளுங்க...
பிள்ளையார்
Vinayakar: ஆனைமுகத்தானை முதலில் வணங்கிவிட்டுத்தான் அடுத்தடுத்த தெய்வங்களை வணங்க வேண்டும். ஆலயங்களுக்குச் சென்றாலும் அங்கே முதலில் பிள்ளையார் சந்நிதிதான் இருக்கும்.
விநாயகரை வழிபட்டு பிரார்த்தனை செய்தால், சகல கிரக தோஷமும் விலகும். சங்கடங்கள் அனைத்தும் தீரும். எந்த தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரைத்தான் வணங்க வேண்டும். ஆனைமுகத்தானை முதலில் வணங்கிவிட்டுத்தான் அடுத்தடுத்த தெய்வங்களை வணங்க வேண்டும். ஆலயங்களுக்குச் சென்றாலும் அங்கே முதலில் பிள்ளையார் சந்நிதிதான் இருக்கும். அவரை வணங்கிய பிறகுதான் அடுத்தடுத்த மண்டபங்களுக்குள் நுழைந்து, அடுத்தடுத்த சந்நிதிகளில் உள்ள தெய்வங்களை வணங்கி வழிபடவேண்டும்.
அதேபோல், ஹோம பூஜைகள் செய்யும்போது கூட, முதலில் பிள்ளையாரை வணங்கிய பிறகே உரிய தெய்வங்களுக்கான ஹோம, யாகங்களைச் செய்வது வழக்கம் என்கின்றன சாஸ்திரங்கள்.
வரலட்சுமி விரதம், கேதார கெளரி நோன்பு முதலான விரத காலங்களில் கூட, முதலில் கணபதி பெருமானை வணங்கிவிட்டுத்தான், அடுத்த பூஜையை மேற்கொள்ள வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தீபதூப ஆராதனைகள் காட்டிவிட்டுத்தான் எந்த பூஜையையும் மேற்கொள்வோம். அதனால்தான் முதற்கடவுள் பிள்ளையார் என்றும் முழுமுதற்கடவுள் அவரே என்றும் வலியுறுத்துகின்றன சாஸ்திரங்கள்...
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியை அடுத்தும் அமாவாசையை அடுத்தும் நான்காம் நாள் சதுர்த்தி வரும். இதில் பெளர்ணமியை அடுத்து வரும் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.