விநாயகர் சதுர்த்தி உருவான கதை

விநாயகர் சதுர்த்தி

Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி உருவாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ள காரணம்.

 • Share this:
  முதன்மை கடவுளாக விளங்கும் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படுவது தொடர்பாக பல புராண கதைகள் உள்ளன. கஜமுகாசுரனை கொன்றதால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது என்பதும் ஐதீகம்.

  சிவபெருமானின் அருள் பெற்ற கஜமுகாசுரன் தன் பெற்ற வரத்தின் வல்லமைகளால் தலைகணம் கொண்டு தேவர்களை பல வழிகளில் துன்புறுத்தி வந்துள்ளார். தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி கஜமுகாசுரன் வரம் பெற்று இருந்ததால் செய்வதறியாமல் தேவர்கள் திணறி வந்தனர்.

  எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவ பெருமானிடம் சரண் அடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.

  விநாயகருக்கும் கஜமுகாசரனுக்கும் இடையே மிகப்பெரிய போர் நடைபெற்றது. போரின் முடிவில் எந்த ஆயுதங்களாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்று கஜமுகாசுரன் வரம் பெற்றதால் தன்னுடைய கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை சம்ஹாரம் செய்வார்.

  Also Read : விநாயகர் அரசமரத்தடி, குளக்கரையில் அமர்ந்திருக்கும் காரணம் தெரியுமா?  பின்னர் கஜமுகாசரனையை மூஞ்சுறாக மாற்றி தனது வாகனமாக்கி கொண்டார் என்பது புராணங்களில் கூறப்படுவது. எனவே ஆவணி மாத சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால் தீராத வினை தீரும் என்று அனைத்துவிதமான பாக்கியங்கள் நம்மை வந்து சேரும் என்பது ஐதீகம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vijay R
  First published: