Home /News /spiritual /

விநாயகர் சதுர்த்தி 2022 : வீட்டில் உள்ள விநாயகர் சிலைகளுக்கு சக்தியூட்டுவது எப்படி?

விநாயகர் சதுர்த்தி 2022 : வீட்டில் உள்ள விநாயகர் சிலைகளுக்கு சக்தியூட்டுவது எப்படி?

விநாயகர் சதுர்த்தி 2022

விநாயகர் சதுர்த்தி 2022

விநாயகர் சதுர்த்தி 2022 : வீட்டில் உள்ள விநாயகர் சிலைகளை சக்தியூட்டுவது எப்படி? என இலக்கிய, சமயச் சொற்பொழிவாளர் தேச. மங்கையர்க்கரசி கூறியுள்ளவற்றை இந்த பதிவில் காணலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விநாயகர் சதுர்த்திக்கு வீட்டையும், பூஜை அறைகளையும் தயார் செய்ய நாளை மட்டுமே உள்ளது. இயற்கையான களிமண் சிலைகளை வாங்குவது , வீட்டில் இருக்கும் சிலைகளை தயார் செய்வது , வீட்டிலேயே விநாயகர் விக்ரஹம் செய்வது, மோதகம் செய்ய பொருட்களை வாங்க வேண்டும், பூஜை சாமான்களை வாங்க வேண்டும் என தற்போது பலரும் பிசியாக இருப்பர். பிஸியான ஷெடியூளுக்கு நடுவில் வீட்டில் உள்ள விநாயகர் சிலைகளுக்கு சக்தியூட்டுவது எப்படி? என்பதை இந்த பதிவில் பார்த்து விடலாம்.

    பொதுவாக நமது வீட்டில் காசி, ராமேஸ்வரம், திருக்கோவில்கள் என ஏதாவது ஆன்மீக சுற்றுலா சென்றாலோ இல்லை பிறந்த நாளுக்கு யாராவது விநாயகர் சிலை பரிசாக கொடுத்தாலோ, நாமாக விருப்பப் பட்டு வெள்ளி விநாயகர், உலோகத்தால் ஆன விநாயகர் என எதையாவது வாங்கினாலோ அதனை அலங்காரமாக வீட்டில் அப்படியே வைத்திருப்போம். இல்லையெனில் பூஜை அறையில் , வீட்டு பீரோவில் அந்த விநாயகர் எவ்வித வழிபாடும் செய்யப்படாமல் வைக்கப்பட்டிருக்கும். அதனை கண்டறிந்து இன்றே எவ்விதம் வழிபாடு செய்வது என்பது குறித்து இலக்கிய, சமயச் சொற்பொழிவாளர் தேச. மங்கையர்க்கரசி கூறியுள்ளார்.

    விநாயகர் சிலை


    அதில் இந்த பதிவை பார்த்த உடனே என்ன விநாயகருக்கு சக்தி ஊட்டணுமா? அவரு ஏற்கனவே சக்தியோடத் தானே இருக்காரு எனும் எண்ணம் வந்திருக்கும்.

    ALSO READ | விநாயகர் சதுர்த்தி 2022 : வழிபடும் முறை, சிலை வாங்கும் நேரம் & பூஜை நேரம்

    உங்கள் வீட்டில் இருக்கும் அபிஷேகம் செய்யத் தகுதியான விநாயகரை ( மண் விநாயகர் தவிர்த்து) ஒரு தாம்பாளத்தில் வைத்து முதலில் தண்ணீர் விட்டு பின்னர் பால் விட்டு அதன் பின்னர்  உங்களால் என்ன முடியுமோ சந்தனம், இளநீர், பன்னீர் என எதுவாக இருந்தாலும் அபிஷேகம் செய்யலாம். எதுவுமே இல்லை எனில் தண்ணீர் விட்டு கொஞ்சம் பால் விட்டு நன்றாக அபிஷேகம் செய்து ஒரு சந்தனம் , குங்குமம் வையுங்கள் போதும். 2 அருகம் புல் அவருக்கு போட்டுவிட்டு விநாயகர் அகவல் படியுங்கள்.



    விநாயகர் சதுர்த்திக்கு மற்ற விநாயகரையும் சதுர்த்திக்கு வைக்கும் விநாயகரோடு சேர்த்து தீப, தூப ஆராதனைகள் காட்டிடுங்க. அதன் பிறகு முன்பு விநாயகர் அனைத்தும் எங்கு வைத்திருந்தீர்களோ அங்கே வைத்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு நம் வீட்டில் இருக்கும் அனைத்து விநாயகரையும் எடுத்து பால் அபிஷேகம் செய்து விநாயகர் அகவல் படித்தால் விநாயகர் எங்கு இருந்தாலும் ஆற்றல் நிறைந்த சக்தி நிறைந்த சக்தி கணபதியாக நமக்கு காட்சி கொடுப்பார் என இலக்கிய, சமயச் சொற்பொழிவாளர் தேச. மங்கையர்க்கரசி கூறியுள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி

    அடுத்த செய்தி