துன்பம் தீர்க்கும் தொப்பை கணபதியே!

Youtube Video

விநாயகரை வழிபட்டால் அனைத்து பாக்கியங்களும் நமக்கு கிடைக்கும். பிள்ளையார் விரதத்தில் பல வகை உண்டு. அதில் விநாயகர் சதுர்த்தி அன்று துவங்குகிற சதுர்த்தி விரதம் முக்கியத்துவம் வாய்ந்தது.

  • Share this:
    முழுமுதற்கடவுளான விநாயகப் பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்வது நல்லது. விநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகும். அதேபோல திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்ததாகும். கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர், கேது பகவான் பரிகாரமாக ஷோடச கணபதி ஹோமம் செய்வது விசேஷம். மேலும் சண்டி ஹோமம் செய்வதால் கேது பகவானைத் திருப்திப்படுத்த முடியும்.

    இதில் முக்கியமாக ஆவணி மாதத்தில் வருகிற விநாயக சதுர்த்தி தினத்தில்தான், சுக்லபட்ச சதுர்த்தி விரதத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். தொடர்ந்து மாதம்தோறும் வருகிற சதுர்த்தி நாட்களில் விரதம் இருந்து வரவேண்டும். 11 சதுர்த்தி தினங்களில் விரதம் இருந்த பிறகு, அடுத்த ஆவணி யில், மீண்டும் விநாயக சதுர்த்தி அன்று விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். தடைபட்ட திருமணம், படிப்பு, வேலை, குழந்தைப் பேறு, வீடு கட்டுதல் என பல்வேறு காரணங்களுக்காக சதுர்த்தி விரதம் இருக்கலாம். வேண்டுதல் நிறைவேறும்

    ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களையும் 3 விதமான கணங்களாகப் பிரித்து, திருமண சமயத்தில் கணப்பொருத்தம் பார்ப்பர். அவை தேவ கணம், மனித கணம், ராட்சச கணம். நாம் தேவ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், மனித கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அசுர கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப்பெருமான். அவருக்கு உகந்த நாள் ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தி.

    மேலும் படிக்க... உங்கள் கடன் தீர வேண்டுமா? அப்போ உடனே இந்த பரிகாரத்தை பைரவருக்கு செய்யுங்கள்...

    கையில் ஒரு பிடி பிடித்து வைத்தால் அது பிள்ளையார் ஆவார். பிள்ளையாரை மஞ்சளோஅல்லது மாட்டுச்சாணமோ ஒரு இலையில் பிடித்து வைத்தால் அவர் விநாயகராக அருள் தருவார்என்பது ஐதீகம்விநாயகரை வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்குச் சென்றும் வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை நாம் நம்பிக்கையோடு வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும். துன்பங்கள் தூர விலகி ஓடும் என்பது நம்பிக்கை.

    மேலும் படிக்க... தினமும் அம்மனை வழிபாடு செய்வது சிறப்பு!



    மேலும் படிக்க... காலையில் சொல்ல வேண்டிய சூரிய ஸ்லோகம்...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: