விநாயகர் சதுர்த்தி 2021 எப்போது, பூஜைக்கான சரியான நேரம் இதோ!

விநாயகர்

Vinayagar Chathurthi 2021 | வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு ஒவ்வொருவரும் செய்வது அவசியமானது.

  • Share this:
    நமது வழிபாடுகள் எல்லாவற்றிற்கும் முன் நிற்கும் தெய்வம் பிள்ளையார். பிள்ளையார் சுழியிலிருந்து கோலமிட்டு நடுவில் பிள்ளையார் பிடித்து வைப்பது வரை நம் உயிரோடு கலந்து உறவாடும் தெய்வம் பிள்ளையார். ‘வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்’ என்பதும் ‘வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ துள்ளியோடும் தொடரும் வினைகளே’ என்பதும் நமது ஊர்களில் பழகி வரும் மொழிகள்..

    எந்த ஒரு காரியம் செய்கிற போதும் பிள்ளையார் சுழி போடுவது, பிள்ளையாருக்கு தேங்காய் அர்ப்பணிப்பது என்று நமது காரியங்கள் அனைத்தும் பிள்ளையாருடன் ஒட்டிதாகவே நடைபெற்று வருகின்றன. எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு பிள்ளையாருக்கு உண்டு. உலகத்தில் பல நாடுகளில் பிள்ளையார் வழிபாடு காணப்படுகிறது.

    விநாயகர் சதுர்த்தி எப்போது?

    விநாயகர் சதுர்த்தி தினம் ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு ஆவணி 25ம் தேதியான நாளை வெள்ளிக்கிழமை, செப்டம்பர் மாதம் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதில் நாடு முழுவதும் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க்கது.

    விநாயகர் பூஜை செய்ய சரியான நேரம்

    விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, பழங்கள் உள்ளிட்ட பல பதார்த்தங்களைப் படைத்து வழிபடுவது வழக்கம். விநயாகர் அவதரித்த அந்த நாள் முழுவதும் மிக நல்ல நேரமாக இருந்தாலும், பூஜை செய்ய மிகவும் நல்ல நேரம் எது என்று பார்க்கலாம்..

    மேலும் படிக்க... விநாயகரின் வித்தியாசமான வடிவங்கள் என்னென்ன தெரியுமா?

    நல்ல நேரம்

    காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை

    மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

    கெளரி நல்ல நேரம்

    காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை

    பகல் 1.00 மணி முதல் 1.30 மணி வரை

    மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை

    இரவு 09.30 மணி முதல் 10.30 மணி வரை

    மேலும் படிக்க... பிள்ளையாரின் பெருமைகள், திருதலங்கள் , புராணங்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்...

    கணபதி ஹோமம் செய்ய மிகவும் நல்ல நேரம்

    காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை

    விநாயகர் சதுர்த்தி எப்படி கொண்டாட வேண்டும்?

    வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு ஒவ்வொருவரும் செய்வது அவசியமானது. தற்போது கொரோனா காலமாக இருப்பதால் அனைவரும் அவர்களது வீட்டில் சிறிய மண் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு மூன்று அல்லது 5 நாட்கள் கழித்து அதை நீர் நிலைகள், ஆறு, கடலில் கரைப்பது நல்லது... இந்த முறை பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. கோவிலுக்கு செல்லாமலும் கும்பல் கூடாமலும், சமூக இடைவெளியுடன் இந்த விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுமாறு பல சமூக ஆர்வலர்கள் வலியுறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க... விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் வாழ்த்து அட்டைகள்!

    எந்தெந்த திதியில் எந்தெந்த விநாயகரை வணங்குதல்   

    விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய 12 முக்கிய ஸ்லோகங்கள்...

    விநாயகரின் 32 வடிவங்கள் என்னென்ன தெரியுமா? 

    தோஷங்கள் நீக்கும் விநாயகர்... 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய பிள்ளையார்கள்...                 

    விநாயகர் சிலைகளை இயற்கை மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும் – சத்குரு வேண்டுகோள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: