விநாயகர் அரசமரத்தடி, குளக்கரையில் அமர்ந்திருக்கும் காரணம் தெரியுமா?

அரசமரம் விநாயகர்

பெண்கள் அரச மரத்தை சுற்றி வரும் போது சுவாசிக்கும் காற்று, பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்க கூடியது.

 • Share this:
  முதல்கடவுளாக வணங்கப்படும் விநாயகர் பெரும்பாலும் அரசமரம், ஆற்றங்கரை மற்றும் குளக்கரைகளில் அமர்ந்திருப்பதற்கு காரணங்கள் உள்ளது.

  கணபதி பெரும்பாலும் ஆற்றங்கரை ஓரங்களிலும், குளக்கரை ஓரங்களிலும் உள்ள அரச மரத்தின் அடியில்தான் வீற்றிருப்பார். அங்கு தான் விநாயகரின் விக்கிரகங்களை ஸ்தாபனம் செய்வார்கள். நிழல் படிந்த நீரில் குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது. குளித்து முடித்தவுடன் இறைவனை தரிசனம் செய்வது மிகவும் சிறந்தது என்ப தால் குளக்கரை ஓரம் இருக்கும் அரச மரத்தின் அடியில் விநாயகரை வைத்துள்ளனர்.

  பெண்கள் அரச மரத்தை சுற்றி வரும் போது சுவாசிக்கும் காற்று, பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்க கூடியது. எனவே கிராமங் களில் ஆற்றங்கரைகளிலோ, குளக்கரை ஓரங்களிலோ உள்ள அரசமரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார்.

  Also Read : விநாயகர் சிலைகளை இயற்கை மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும் – சத்குரு வேண்டுகோள்

  நாயகன் என்றால் தலைவன் என்று பொருள். ‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று அர்த்தம். விநாயகர் என்பது, இவருக்கு மேல் பெரிய தலைவர் எவருமில்லை என்பது முழுப் பொருளாகும். கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது ‘ஓம் அநீஸ்வராய நம’ என்றும் கூறுவார்கள். அநீஸ்வராய என்பதற்கு தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லை என்பது பொருளாகும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: