காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் - விஜயகாந்த் கோரிக்கை

News18 Tamil
Updated: July 14, 2019, 1:44 PM IST
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் - விஜயகாந்த் கோரிக்கை
காஞ்சிபுரம் அத்திவரதர்
News18 Tamil
Updated: July 14, 2019, 1:44 PM IST
காஞ்சிபுரம் அத்திவரதரை பொதுமக்கள் தரிசிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதரை பூஜை செய்து 48 நாட்கள் மக்கள் தரிசிப்பதற்காக பார்வைக்கு வைப்பது மக்களுக்கு மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அத்திவரதரை தரிசிக்க பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு தரிசிக்கும் நேரத்தை அதிகரித்து, காணவரும் பக்தர்களுக்கு அனைத்து அத்தியாவசிய உதவிகளும், பாதுகாப்பும் தமிழக அரசாங்கம் செய்திட வேண்டும். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு என்பதால் லட்சக்கணக்கான மக்கள் காஞ்சிபுரம் நோக்கி வருகிறார்கள், எனவே தரிசிக்க வரும் பொதுமக்களுக்கு எல்லா விதத்திலும் தமிழக அரசாங்கம் உதவி செய்திடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
First published: July 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...