மார்கழியின் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுவது போல, ஒவ்வொரு மாதமும் வருகிற ஏகாதசியும் ரொம்பவே விசேஷம். அந்த வகையில் நாளை மாசி மாத ஏகாதசி. மாசி மாதத்தில் வரும் ஏகாதசியும் சிறப்பு வாய்ந்தது. மாசி மாதத்தில் வரும் ஏகாதசிகளுக்கு ஜெய ஏகாதசி, விஜய ஏகாதசிகள் என்று பெயர். இதில் வளர்பிறை வருவது ஜெய ஏகாதசி என்றும், தேய்பிறையில் வருவது விஜய ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு ஏகாதசிகளிலும் விரதம் இருப்பவர்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
விரதங்களில் ஏகாதசிக்கு இணையான விரதம் எதுவும் இல்லை என பத்ம புராணம், கருட புராணம் உள்ளிட்ட புராணங்கள் சொல்கின்றன. ஏகாதசி திதியானது வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு முறை வருகிறது. அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு முந்தைய நான்காவது நாளை ஏகாதசி என்கிறோம். வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வருகின்றன. ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயரும், தனிச்சிறப்பும் உண்டு. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலன்களை தரக்கூடியன.
மாசி மாதம் வழிபாட்டிற்குரிய மாதம் என்பதால் இந்த மாதத்தில் வரும் அனைத்து திதிகளும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவை. அப்படி மாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு விஜய ஏகாதசி என்று பெயர். 2023 ம் ஆண்டில் விஜய ஏகாதசி பிப்ரவரி 16ம் தேதி வருகிறது. அதிர்ஷ்டம், வெற்றி, செல்வவளம் உள்ளிட்ட சகல விதமான ஐஸ்வர்யங்களையும் தரும் சக்தி பெற்ற நாள் இதுவாகும்.
தேதி, நேரம் குறித்த தகவல்
விஜய ஏகாதசி திதியானது பிப்ரவரி 16 -ம் தேதி காலை 05.32 மணிக்கு துவங்கி, பிப்ரவரி 17 ம் தேதி அதிகாலை 02.49 மணிக்கு நிறைவடைகிறது. பிப்ரவரி 16 ம் தேதி காலையிலேயே ஏகாதசி விரதத்தை துவங்கி விட வேண்டும். அன்று நாள் முழுவதும் உபவாசம் இருந்து, பிப்ரவரி 17 ம் தேதி காலை 08.01 முதல் 09.13 மணிக்குள் பாரணை செய்து ஏகாதசி விரதத்தை நிறைவு செய்யலாம்.
Also see... மகா சிவராத்திரி 2023 எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...
சொல்ல வேண்டிய மந்திரம்
"ஓம் நமோ பகவதே வாசுதேவாய"
"ஓம் நமோ நாராயணா"
இந்த மந்திரங்களை பூஜையின் போதும், மற்ற நேரங்களிலும் பாராயணம் செய்வது மகாவிஷ்ணுவின் ஆசிகளை பெற்றுத் தரும்
ஏகாதசி விரத பலன்கள்
விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். ஏகாதசி விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். வாழ்வில் ஏற்றம் பெற்று, சங்கடங்கள் தீர்ந்து இன்புற்று வாழலாம். காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: God, Vaikunda ekadasi