முகப்பு /செய்தி /ஆன்மிகம் / வானில் நிகழ போகும் அபூர்வம்.. மார்ச் 1ஆம் தேதி காணத்தவறாதீர்கள்..!

வானில் நிகழ போகும் அபூர்வம்.. மார்ச் 1ஆம் தேதி காணத்தவறாதீர்கள்..!

அதிசய வானியல் நிகழ்வு ( கோப்புப் படம் )

அதிசய வானியல் நிகழ்வு ( கோப்புப் படம் )

Venus And Jupiter | மார்ச் 1, புதன்கிழமை மாலை, 0.52 டிகிரி இடைவெளியில் ஒரே நேர்கோட்டில் நிலவு, வெள்ளி, வியாழன் சந்திக்கும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வானில் வெள்ளி, வியாழன் மற்றும் துணை கோளான நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வு நேற்று நிகழ்ந்தது. சூரிய குடும்பத்தில் ஒவ்வொரு கோள்களும் அதற்கே உரித்தான கோணங்களில் சாய்ந்து, நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. அவ்வப்போது, சில கோள்கள் நேர்கோட்டில் வரும் நிகழ்வும் நடக்கிறது. அந்த வகையில் சூரியனை சுற்றி வரும் வெள்ளி மற்றும் வியாழன் ஆகிய இரண்டு கோள்களும், பூமியை சுற்றி வரும் துணைக்கோளான நிலவும் ஒன்றுக்கொன்று ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டன.

இது கிரகங்கள் இணைவு என அழைக்கப்படும் வானின் அரிய நிகழ்வு மாலை 6 மணி முதல் 7 மணி வரை நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தெரிந்தது . சென்னையில் பொதுமக்கள் பலரும் இந்த அரிய நிகழ்வினை கண்டுகளித்தனர். மேலும் இந்த நிகழ்வு வருகின்ற மார்ச் 1ஆம் தேதி மிக மிக அருகில் சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Also see... சுக்கிரன்-ராகு சேர்க்கை 2023: இந்த 3 ராசியினருக்கு திடீர் பண வரவு கிடைக்கும்..!

ஸ்பேஸ் டாட் காம் (Space.com) கருத்துப்படி, இந்த மாத தொடக்கத்தில், இந்த இரண்டு கிரகங்களும் 29 டிகிரி என்ற தூரத்தில் பிரிந்து சென்றன. இப்போது அவை மெதுவாக ஒருவருக்கொருவர் நெருங்கி வருகின்றன. பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள், இரண்டு கோள்களுக்கும் இடையிலான தூரம் ஒன்பது டிகிரிக்கு சற்று அதிகமாக இருந்தது. பிப்ரவரி 27 அன்று, இடைவெளி வெறும் 2.3 டிகிரியாகக் குறைந்துவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1, புதன்கிழமை மாலை, 0.52 டிகிரி இடைவெளியில் கிரகங்கள் மிக அருகில் இருக்கும். வியாழன் அளவு -2.1 ஆகவும், வீனஸ் -4.0 அளவிலும் பிரகாசிக்கும். இந்த இரண்டு கிரகங்கள் மட்டுமல்ல, சந்திரனும் அதில் சேரும் என்று ஸ்பேஸ் டாட் காம் (Space.com) அறிக்கை குறிப்பிடுகிறது. அதனால் இந்த அரிதான நிகழ்வை மார்ச் 1ஆம் தேதி அன்று காணத்தவராதீர்கள்..

First published:

Tags: Astronomy