ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

வெற்றிதரும் வெள்ளேருக்கு விநாயகர் வழிபாடு!

வெற்றிதரும் வெள்ளேருக்கு விநாயகர் வழிபாடு!

வெற்றிதரும் வெள்ளேருக்கு விநாயகர்

வெற்றிதரும் வெள்ளேருக்கு விநாயகர்

தன ஆகர்ஷன சக்தியை அள்ளிக் கொடுக்கக் கூடிய வல்லமையானது இந்த வெள்ளருக்கு விநாயகருக்கு அதிகமாக உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

வெள்ளெருக்கு வேரினால் செய்த பிள்ளையாரை வீட்டில் வைத்து வணங்கினால் புண்ணியம் பெருகும். சுமாராக ஆறு ஆண்டுகள் வளர்ந்த செடியே சிலை வடிக்க உகந்தது. அதுவும் செடியின் வடக்கு பக்கமாக செல்லும் வேரை பயன்படுத்துவது வழக்கம். அதற்கு முன்னதாக வெள்ளெருக்கன் செடிக்கு ஆகம முறைப்படி ஒரு மண்டல காலம் பூஜை செய்து வணங்குவது ஐதீகம்.

ஆனால், அது உண்மையான வெள்ளெருக்கு வேரினால் செய்யப்பட்ட பிள்ளையாராய் இருப்பதுதான் முக்கியம். அதை சோதித்து வாங்கி வரவேண்டும். போலியானதாய் இருந்தால் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். அதுமட்டுமல்லாமல் கண்டிப்பாக பிள்ளையாரை வடிக்க வெள்ளை நிற பூக்கள் பூக்கும் வெள்ளை எருக்கன்செடிதான் தேர்வு செய்யப்பட வேண்டும்.

மேலும் படிக்க...

சூரியனுக்குரிய மூலிகையாக கருதப்படும் வெள்ளெருக்கு, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை நுட்பமாக கிரகித்து வளரும் தன்மை பெற்றது. அதுமட்டுமல்லாமல் சூரியனது ஆற்றலை தனக்குள் முழுவதுமாக ஈர்க்கும் சக்தி படைத்தது எருக்கன்செடி இலை. இதன் வெள்ளெருக்கு வேரை எடுப்பதற்கு முன்னர் வேப்பிலை, கூழாங்கல், மா இலை, வில்வ இலை ஆகியவற்றை மாலை போல் கோர்த்து, அந்த வெள்ளெருக்கு செடியை சுற்றி காப்பு கட்டப்படும். பிறகு, ஒருவாரம் கழித்த பின்னர் வெள்ளெருக்கு வேரை எடுத்து, தக்க முறையில் பதப்படுத்தி, விநாயகர் வடிவத்தை செய்ய பயன்படுத்த வேண்டும். வெள்ளெருக்கன் செடியானது அதீதமான உயிர் சக்தி கொண்டதாகும். எனவே அதனை பார்த்த உடனே வேரை வெட்டி எடுத்துவிடாமல், மேற்கண்ட பரிகார முறைகளை கடைப்பிடிப்பது சிறப்பான பலன்களுக்கு வழிவகுக்கும்.

மேலும் படிக்க... ஆடி திரிசூலம் அம்மன் பாடல்கள்.

வெள்ளேருக்கன் பூ

வெள்ளேருக்கின் பலன்கள்

தன ஆகர்ஷன சக்தியை அள்ளிக் கொடுக்கக் கூடிய வல்லமையானது இந்த வெள்ளருக்கு விநாயகருக்கு அதிகமாக உள்ளது. இதுபோல் நம் வீட்டில் விளக்குகளுக்கு போடப்படும் விளக்கு திரிக்கு பதிலாக வெள்ளெருக்குப் பட்டையில் விளக்கேற்றினால், நம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் விலகி ஓடிவிடும். இப்படியாக நீங்கள் நம்பிக்கையோடு செய்யப்படும் ஒவ்வொரு பரிகாரமும் நிச்சயம் உங்களுக்கு வெற்றியை தேடித்தரும்.

மேலும் படிக்க... நவகிரக பாதிப்புகளிலிருந்து விடுபட எளிய பரிகாரங்கள்

வெற்றிதரும் வெள்ளேருக்கு விநாயகர்

வெள்ளேருக்கு பிள்ளையார் வீட்டில் வழிபாடும் முறை

வெள்ளெருக்கன் செடியானது அதீதமான உயிர் சக்தி கொண்டதாகும். எனவே வெள்ளெருக்கு  பிள்ளையாரை புதியதாக வீட்டுக்கு வாங்கி வந்தவுடன் ஒரு வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12குள் ராகு காலத்தில், அந்த விநாயகர் சிலை முழுவதும் அரைத்த மஞ்சளை பூசி வைக்கவும். இதுபோல் அடுத்த வெள்ளிக்கிழமை ராகுகால சமயத்தில் சந்தன விழுதை விநாயகர் சிலை முழுவதும் பூசி நிழலிலேயே உளற வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க... பிள்ளையாரின் பெருமைகள், திருதலங்கள் , புராணங்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்...

வெள்ளேருக்கின் பயன்கள்

வெள்ளெருக்கம்பூ ஆஸ்துமா, மார்புச்சளி ஆகியவற்றுக்குச் சிறந்தது. குப்பை மேடுகளிலும் தரிசு நிலங்களிலும் காணப்படும் எருக்கன் செடியை விஷ செடி என்று நாம் ஒதுக்கி விடுகிறோம். எருக்கன் செடியில் பூக்கும் பூக்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. விஷக்கடிக்கு மருந்தாக பயன்படும் இந்த பூக்கள் சிறுநீரக கோளாறுகளை மூன்று நாட்களில் குணமடையும்.

வெள்ளெருக்கு, நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன என சித்தவைத்தியர்கள் கூறுகின்றனர். எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது. அதன் பருவகாலத்தில் பூத்து, காய்த்து, வளர்ந்துவிடும். இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு. இதை வீட்டிலும் வளர்க்கலாம்.

புதர்செடி வகையைச் சேர்ந்த வெள்ளெருக்கு வேர் பாம்புக்கு ஆகாது என்று சொல்லியிருக்கிறார்கள். சக்தி வாய்ந்த வெள்ளெருக்குச் செடியின் இலை, பூ, பால், பட்டை, வேர் முதலியன மருத்துவப் பயனுடையது. பலவிதமான நோய்களுக்கான தீர்வை தன்னுள் வைத்துக் கொண்டிருக்கும் இந்த எளிய செடியின் மருத்துவ குணங்கள் ஏறாலாம்.

மேலும் படிக்க... ஆடி முதல் நாள் குலதெய்வத்தையும் அம்மனையும் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தால் நல்லது...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Temple