• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • இந்தப் பொருளை நமது வீட்டில் வைத்திருந்தால் லட்சுமியும் சரஸ்வதியும் ஒன்றாக சேர்ந்து வருவார்கள்!

இந்தப் பொருளை நமது வீட்டில் வைத்திருந்தால் லட்சுமியும் சரஸ்வதியும் ஒன்றாக சேர்ந்து வருவார்கள்!

வெள்ளி மயில்

வெள்ளி மயில்

வாஸ்துசாஸ்திரம் கூறுகையில், நிதிப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் மயில் சிலை ஒன்றை வீட்டில் அல்லது அலுவலகத்தில் தென்கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். அப்படி வைப்பதினால் உங்கள் வீட்டில் எப்போதும் பணம் பிரச்சினை இருக்காது.

  • Share this:
இன்றைய உலகில் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ பணம் மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது. அந்த பண செல்வத்தை அதிகரிக்கவும் குறையாமலும் வைத்திருக்க செல்வத்தின் அதிபதியான குபேர கடவுளை வணங்கினால் நல்லது. மேலும் செல்வ செழிப்புடன் வாழ சில வாஸ்து குறிப்புகளையும் பின்பற்றினால் வீட்டில் செல்வம் பெருகும்.

குபேரன் கடவுளை வணங்கினால் சந்தோஷமும் செல்வமும் நிறைந்திருக்கும். உங்கள் வாழ்க்கையில் எதற்கும் குறை இருக்காது. மேலும் உங்கள் நிதி பிரச்னையை சரி செய்ய சில வாஸ்து சம்பந்தமான ஒரு எளிய தீர்வை இங்கே தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

மயில் உலகின் மிக அழகான பறவைகளில் ஒன்றாகும். இந்து மதத்தில், மயில் என்பது லட்சுமி மற்றும் சர்ஸ்வதி தெய்வங்களுடன் தொடர்புடைய பறவை. கட்டிடக்கலையை கருத்தில் கொண்டு, வீட்டில் ஒரு வெள்ளி மயில் வைத்தால் அது லட்சுமி கடாஷம். அதனால் அந்த வீடே ஆசீர்வதிக்கப்பட்ட வீடாக மாறிவிடும். அதிலும் நடனமாடும் வெள்ளி மயில் வீட்டில் இருந்தால், அறிவு மற்றும் செல்வம் இரண்டையும் குறிக்கும் லட்சுமியும் சரஸ்வதியும் வீட்டிற்கு ஒன்று சேர்ந்து வருவார்கள் என்பது ஐதீகம்.

 

வீட்டில் ஒரு வெள்ளி மயில் இருந்தால், வீட்டில் இருக்கும் வேறு எந்த பிரச்சனைகளையும் சரிசெய்யும் என்பது நம்பிக்கை. உதாரணமாக,  தொடர்ந்து திருமணத்தில் தடை ஏற்பட்டு இருந்தால் அல்லது உங்கள் வாழ்க்கை துணையுடன் தொடர்ந்து சண்டையிடுகிறீர்கள் என்றால், நீங்கள் வீட்டில் ஒரு வெள்ளி மயில் சிலையை வைத்து பாருங்கள்.  இது உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பும் அமைதியும் ஏற்படும். உங்கள் வீட்டின் செல்வ செழிப்பும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க... என்னென்ன ராசிக் காரர்கள் எந்தெந்த திசையை நோக்கி இருக்கும் வீட்டில் இருப்பது நல்லது?

இது குறித்து வாஸ்துசாஸ்திரம் கூறுகையில், நிதிப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் மயில் சிலை ஒன்றை வீட்டில் அல்லது அலுவலகத்தில் தென்கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். அப்படி வைப்பதினால் உங்கள் வீட்டில் எப்போதும் பணம் பிரச்சினை இருக்காது.

மேலும் படிக்க... பணத்தடை நீங்கி குபேர யோகம் பெற இதை செய்யுங்கள்!

ஒரு மயில் வெள்ளி சிலையை வீட்டில் வைப்பதைத் தவிர இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. நீங்கள் வீட்டில் பணம், நகைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களை வைத்திருக்கும் லாக்கர் அல்லது ஒரு பாதுகாப்பான பீரோவை வீட்டின் தெற்கு அல்லது தென்கிழக்கு சுவரில் வைக்க வேண்டும். மேலும் அந்த பீரோ அல்லது லாக்கரை வடக்கே திறக்குமாறு வைக்க வேண்டும். வடக்கு திசை குபேர தேவனுடையது என்று நம்பப்படுகிறது. 

இதையெல்லாம் செய்யும்போது, ​​ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். அதாவது, பணம் அல்லது உடைமைகள் மோசமான வழியில் சம்பாதித்ததாக இருக்க கூடாது. மற்றவர்களை ஏமாற்றி சம்பாதித்தாகவும் இருக்க கூடாது. நேர்மையாகவும் ஒருவரின் சொந்த உழைப்பாலும் பெறப்பட்ட செல்வமாக மட்டுமெ இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால் மட்டுமே அது நிலைத்திருக்கும் அவற்றிற்கு மட்டுமே இந்த மயில் சிலை பரிகாரம் பொருந்தும் என்பது எழுதப்படாத விதி.

மேலும் படிக்க... Mahalakshmi Vrat 2021: மகாலட்சுமி விரதத்தின் முக்கியத்துமும் அதன் வழிபாட்டு முறைகளும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: