வாஸ்து சாஸ்திரம் ஒரு இந்திய வேத முறை, அது உடல், உளவியல், ஆன்மீக ஒழுங்கு ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது. வாஸ்து என்ற வார்த்தையானது 'குடியிருப்பு' என்று பொருள்படும். அமைதி, மகிழ்ச்சி, சுகாதாரம், செல்வம் ஆகியவற்றைப் பெறுவதற்காக வஸ்துவின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவது நல்லது.
நோய்கள், மனச்சோர்வு மற்றும் பேரழிவுகள் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்கு வாஸ்துமுறை நல்ல வழிகாட்டுதல்களாக இருக்கிறது.. எனவே, வீட்டில் உள்ள எதிர்மறையான சக்திகளை வெளியேற்றிவிட்டு நேர்மறை ஆற்றல்களை வரவேற்க தயாராக எப்போதும் இருங்கள்.
வீட்டின் வாசல் சுத்தமாக இருத்தல் நல்லது
சுத்தமான வாசல் உங்கள் வீட்டில் இருந்து எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றிவிடும். எனவே, உங்கள் வாசல் ஒழுங்காக சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்யவும். முடிந்தால் அதில் அழகாக கோலங்கள் போட்டு லட்சுமி தேவியை வரவேற்கலாம்.
வீட்டில் மணி ஓசை கேட்டால் நல்லது
வீட்டினுள் காற்றில் அசையும் மணிகளை கட்டி வைப்பது நல்லது. அது காற்று வீசும் போது மிகவும் மென்மையான இசைகளை ஏற்படுத்தும். இது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வளாகத்திலிருந்து வெளியேற்றுகிறது. டிங்கிங் மணி ஓசைகள் எதிர்மறை ஆற்றலை அழிக்க உதவுகிறது மற்றும் நேர்மறையான ஆற்றல் அதிகரித்து வீட்டில் மகிழ்ச்சி சுபகாரியம் ஆகியவை நடக்க வழிவகுக்கும்.
எல்லாருடைய வீட்டிலும் கல் உப்பு இருப்பது நல்லது
கடல் உப்பு ஒரு மருந்து என்று அறியப்படுகிறது. எதிர்மறை சக்தியை அழிக்க உங்கள் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் கடல் உப்பு உள்ள ஒரு கிண்ணத்தை வைத்துக் கொள்ளுங்கள். அது போல தண்ணீரில் உள்ள எலுமிச்சை உங்கள் வீட்டிலிருந்து எதிர்மறையான ஆற்றலைக் அழித்து நேர்மறை ஆற்றலை தருகிறது. அதனால் ஒரு குடுவையில் தண்ணீர் நிரப்பி ஒரு எலும்பிச்சை பழத்தை போட்டு வையுங்கள்.
விளக்கு ஏற்றுதல்
ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தல் நல்லது. இந்த விளக்கு ஏற்றும் முறை, வீட்டிலிருந்து எதிர்மறையான எரிசக்திகளை அகற்றிவிடும். அத்துடன் வீட்டில்ன் வெளிபுறத்தில் கண்ணாடியை மாற்றி வைப்பது நல்லது. அதுவும் எதிர்மறை ஆற்றலை வெளியேற்றும் வல்லது.
மேலும் படிக்க... Vastu: இந்த அலங்கார பொருட்களை இனிமேல் உங்கள் வீட்டில் வைக்காதீர்கள்...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vastu, Vastu tips