ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

நீண்ட காலம் மகிழ்ச்சியான திருமண வாழ்வுக்கு வாஸ்து டிப்ஸ்...

நீண்ட காலம் மகிழ்ச்சியான திருமண வாழ்வுக்கு வாஸ்து டிப்ஸ்...

திருமணம்

திருமணம்

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், வீடு மற்றும் வீட்டில் உள்ள சில முக்கியமான பொருட்களை நாம் தவறாக வைப்பதால் திருமண வாழ்க்கை பாதிக்கப்படலாம். ஒரு வீட்டின் வாஸ்து, வீட்டைக் கையாளும் முறை, எந்தவொரு திருமண வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் படிக்கவும் ...

"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன" என்று கூறப்படுகிறது. ஆனால், பூமியில் அது நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டுமே! காதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, நீண்ட கால திருமண வாழ்வுக்கு, பரஸ்பர நம்பிக்கை, விட்டுக் கொடுத்துப் போவது, அன்பு ஆகியவைத் தேவை. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை மனநிறைவைத் தருவது மட்டுமல்லாமல், எவ்வளவு கஷ்டம் வந்தாலும், தன்னுடைய வாழ்க்கைத் துணைக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற உந்துதலைத் தருகிறது. இருப்பினும் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் சுதந்திரமான சிந்தனையால் பல்வேறு புதிய பழக்கவழக்கங்களை உருவாக்கியுள்ளனர். இவற்றில் ஒரு சில வழக்கங்கள், தம்பதிகளின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தடுக்கிறது.

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், வீடு மற்றும் வீட்டில் உள்ள சில முக்கியமான பொருட்களை நாம் தவறாக வைப்பதால் திருமண வாழ்க்கை பாதிக்கப்படலாம். ஒரு வீட்டின் வாஸ்து, வீட்டைக் கையாளும் முறை, எந்தவொரு திருமண வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வெவ்வேறு அறைகளுக்கான வாஸ்து சாஸ்திம், (எ.கா, படுக்கையறை, சமையலறை), நிறம், அலங்கரிக்கும் பொருட்கள் மற்றும் உங்கள் வீட்டிலன் செயல்பாடு, ஆகியவை உங்கள் ஆழ் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

உதாரணமாக, உங்கள் திருமண புகைப்படங்கள் மற்றும் ஆல்பங்களை தென்மேற்கு திசையில் வைத்தால், அது உங்கள் திருமண வாழ்க்கையில் அக்கறை, அன்பு, புரிதல் மற்றும் இணக்கத்தை மேம்படுத்துகிறது. அதனால்தான் இந்த தென்மேற்கு திசை காதல், உறவு மற்றும் திறன்களின் திசை என்று அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு இடத்திலும் வாஸ்து சாஸ்திரத்தின் விதிகள் பொருந்தும், உங்கள் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக, நீண்ட கால மகிழ்ச்சியுடன் அமைய வாஸ்து வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். திருமண வாழ்க்கையைக் காப்பாற்ற மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கான வாஸ்து டிப்ஸ் பற்றி இங்கே பார்க்கலாம்.

வெற்றிகரமான, மகிழ்ச்சியான திருமணத்திற்கு வழிவகுக்கும் வாஸ்து குறிப்புகள்:

படுக்கையறை இருக்கும் இடம்

திருமணமான தம்பதியருக்கு வீட்டின் தென்மேற்கு அல்லது வடமேற்கு திசையில் படுக்கையறை இருக்க வேண்டும்.

படுக்கையறையில் மரச் சாமான்கள் மட்டுமே

தம்பதியரின் அறையில், மரச்சாமான்களைப் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கட்டில், டிரஸ்ஸிங் டேபிள், ஸ்டடி டேபிள் போன்ற அனைத்தும் மரத்தாலும் கண்ணாடியாலும் செய்யப்பட வேண்டும். வேறு எந்த உலோகப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.

ஒற்றை மெத்தையைப் பயன்படுத்துங்கள்

பல்வேறு காரணங்களுக்காக, சில ஜோடிகள் இரண்டு சிங்கிள் மெத்தையை பயன்படுத்துவார்கள். எண்ணங்கள் மற்றும் உணர்வுகளில் உள்ள ஒற்றுமையை பிரதிநிதித்துவப்படுத்துவதால், ஒரு ஜோடி ஒற்றை மெத்தையில் தூங்க வேண்டும். அதே போல, மெத்தையின் வடிவம் கச்சிதமான சதுரம் அல்லது நீள்சதுரமாக இருக்க வேண்டும்.

உறுத்தாத, வெளிர் நிற வண்ணங்களைப் பயன்படுத்துங்கள்

சிலருக்கு அடர் மற்றும் பளிச்சென்ற நிறத்தில் வீட்டு அலங்காரங்கள் இருப்பது மிகவும் பிடிக்கும். ஆனால், ஒரு ஜோடியின் படுக்கையறையில் அடர் நிறங்களை தவிர்க்க வேண்டும். உறுத்தாத, வெளிர் (பேஸ்டல் நிறங்கள்) இளஞ்சிவப்பு, இளம்பச்சை, லாவெண்டர் மற்றும் வெளிர் நீலம் உள்ளிட்ட இனிமையான ஷேடுகளைப் பயன்படுத்தலாம். அடர் நிறங்களை படுக்கை அறையில் எந்த விலையிலும் தவிர்த்திடுங்கள், ஏனெனில் அவை எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும்.

படுக்கையறையில் கண்ணாடி வைப்பதைத் தவிர்க்கவும்

கண்ணாடி எந்த அளவுக்கு நேர்மறை ஆற்றல் கொண்டதோ, அதே அளவுக்கு எதிர்மறை ஆற்றலையும் ஈர்க்கும். படுக்கையறையில் கண்ணாடியை வைத்திருப்பது நெகடிவ் எனர்ஜிகளை ஈர்த்து, தம்பதியினரிடையே சண்டைகள் மற்றும் வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கிறது. படுக்கை அறையில் கண்ணாடி இருப்பதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். அவ்வாறு முடியவில்லை என்றால், இரவு நேரத்தில் கண்ணாடியை ஏதேனும் துணியால் மூடி விடுங்கள்.

அறையின் அலங்காரம்

வித்தியாசமான பொருட்களை வைத்து அலங்கரிக்கிறேன் என்று படுக்கையறையில் எந்த ரிஸ்க்கையும் எடுக்க வேண்டாம். படுக்கை அறையில், மகிழ்வான தருணங்களை நினைத்துப் பார்க்கும் வகையில், குடும்பப் புகைப்படங்கள், தம்பதிகளின் புகைப்படங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

Also see... வைகாசி மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்.. மேஷம் முதல் கன்னி வரை ( மே 15 முதல் ஜூன் 15 )

இந்த வாஸ்து குறிப்புகள் உங்கள் திருமண வாழ்க்கைக்கு வண்ணம் சேர்க்கலாம் மற்றும் உங்கள் பிணைப்பைத் தூண்டலாம். உங்கள் உறவில் நீங்கள் கடுமையான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், வாஸ்து நிபுணரை அணுகவும், அவர் உங்கள் திருமணத்தை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் மாற்ற உதவும் தனிப்பட்ட தீர்வுகளை வழங்குவார்.

First published:

Tags: Marriage Life, Vastu tips