ஆரோக்கியமாக இருக்க வாஸ்துப்படி சமையலறையை இந்த திசையில் வையுங்கள்...

சமையலறை

வீட்டின் வடமேற்கு பகுதியில் சமையலறை அமைக்கும்போது கிழக்கு நோக்கி நின்றுதான் சமைக்க வேண்டும். அதற்காக அறையின் தென்கிழக்கு மூலையில் அடுப்பை வைக்க வேண்டும்.

  • Share this:
    "வாஸ்து" என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். வாஸ்து முறையுடன் அமைந்த வீட்டில் அமைதியும், அன்பும், செல்வமும் பொங்கி வழியும்.
    அதுவும் வாஸ்துப்படி வீடு கட்டுவதால் வீட்டில் நல்ல சக்திகளும், பாசிட்டிவ் எனர்ஜியும் நிலைக்கும் என்பது ஐதீகம். நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த மனையடி சாஸ்திரமே, இப்போது வாஸ்து என்று அழைக்கப்படுகிறது. இது பஞ்ச பூதங்களையும், திசைகளையும் அடிப்படையாகக்கொண்டது.

    இந்த வாஸ்த்து முறை ஒருவரின் வாழ்க்கையில் நல்ல வளங்களை தரவல்லது. ஏனெனில் சமையலறை, வாஸ்துவின் அடிப்படையில் அமைந்தால் சிறப்பு என்று வாஸ்த்து சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. நீங்கள் கட்டும் வீட்டின் சமையலறைக்கான வாஸ்து உதவிக்குறிப்புகளைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க...

    உங்கள் சமையலறையை வடிவமைக்கத் திட்டமிடும்போது பின்வரும் காரணிகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சமையலறை வீட்டின் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடமேற்கு திசையில் இருந்தாலும் நல்லது. கட்டடக்கலை டைஜெஸ்ட் வெளியிட்ட அறிவிப்பின்படி, தீ, எரிவாயு அடுப்புகள், சிலிண்டர்கள், மைக்ரோவேவ், ஓவன் மற்றும் பிற உபகரணங்கள் சமையலறையின் தென்கிழக்கு பகுதியில் வைக்கப்பட வேண்டும்.

    அதேபோல வாஷ்பேசின்கள் மற்றும் சமையல் அடுப்பை ஒரே மேடையில் இருக்கும்படி வைக்கக்கூடாது. அல்லது ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும்படி வைக்க வேண்டாம். மேலும் வாஷ்பேசின்கள், வாஷிங் மெஷின், நீர் குழாய்கள் மற்றும் சமையலறை வடிகால்களை வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைத்திருங்கள். வாழ்க்கையில் உள்ள தடைகளை சமாளிக்க குளிர்சாதன பெட்டியை தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும்.

    மேலும் படிக்க... இந்த வாரத்தில் நடக்கவிருக்கும் முக்கியமான ஆன்மிக நிகழ்வுகள்...



    சமையல் அறைக்கான வாஸ்த்து குறிப்புகள்

    1. வீட்டின் வடமேற்கு பகுதியில் சமையலறை அமைக்கும்போது கிழக்கு நோக்கி நின்றுதான் சமைக்க வேண்டும். அதற்காக அறையின் தென்கிழக்கு மூலையில் அடுப்பை வைக்க வேண்டும். ‘வாஷ் பேசின்’ அல்லது ‘சிங்க்’ வடகிழக்கு மூலையில் வருவதுபோல அமைத்துக்கொள்ளவேண்டும்.

    2. ‘ஸ்டோரேஜ் ஷெல்ப்’ அல்லது அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு சுவரை ஒட்டியவாறு இருக்கவேண்டும்.

    3. சிறிய அளவிலான ‘டைனிங் டேபிள்’ போடவேண்டியதாக இருந்தால் மேற்கு அல்லது தெற்கு திசைகள் பொருத்தமாக இருக்கும்.

    4.வாஸ்து வீடுகளில் வடமேற்கு மூலை, தென்கிழக்கு அல்லது வடமேற்கு ஆகிய இரண்டு பகுதிகளை தவிர்த்து மற்ற அறைகளில் சமையலறை அமைந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு வாஸ்து நிபுணர்கள் ஒரு மாற்று வழியை காட்டியிருக்கின்றனர்.

    5. அதாவது சமையல் எந்த அறையில்  செய்யப்பட்டாலும் அந்த அறையின் தென்கிழக்கு மூலையில் அடுப்பை வைத்துக்கொள்வதும், கிழக்கு நோக்கி நின்று சமையல் செய்வதும்  மிகவும் அவசியமானது என்று தற்காலிக மாற்று வழியை காட்டியுள்ளனர்.

    மேலும் படிக்க... என்னென்ன ராசிக் காரர்கள் எந்தெந்த திசையை நோக்கி இருக்கும் வீட்டில் இருப்பது நல்லது?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: