Home /News /spiritual /

இன்று வாஸ்துநாள்... இல்லத்தின் திருஷ்டியைப் போக்க வாஸ்து பகவானை வழிபட உகந்தநாள்...

இன்று வாஸ்துநாள்... இல்லத்தின் திருஷ்டியைப் போக்க வாஸ்து பகவானை வழிபட உகந்தநாள்...

வாஸ்து பகவான்

வாஸ்து பகவான்

Vastu Day : வாஸ்து நாளில், வாஸ்து பகவானை வழிபடுவது சிறப்பு. இல்லத்தின் திருஷ்டியைப் போக்கி, தொழிலில் மேன்மையும் உத்தியோகத்தில் உயர்வும் தந்து அருளுவார் வாஸ்து பகவான். இன்று வாஸ்து நாள்.

    வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது. சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம். ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். அந்த எட்டு நாள்களிலும் வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார். பிறகு மீண்டும் தூங்கச் சென்றுவிடுவார். இந்த நேரத்தை வாஸ்து பூஜை, பூமி பூஜை செய்வதிற்கு உகந்த நேரம் ஆகும்.

    வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாட்களில் ஒருநாளில் ஒன்றரை மணி நேரம் மட்டுமே விழித்திருப்பார் என்கிறார்கள் ஜோதிடர்கள். அப்படி அவர் விழித்ததும் காலையிலேயே நீராடுவார் என்றும் பூஜைகள் செய்வார் என்றும் ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.  இதையடுத்து பூஜைக்குப் பின்னர் உணவு எடுத்துக் கொள்ளுவார்.  அப்படி நிம்மதியும் நிறைவுமாக இருக்கும் தருணம்தான், வாஸ்து பூஜைக்கான நேரம். பூமி பூஜைக்கான நேரமாகும்.

    மனையடி சாஸ்திரம்

    வாஸ்து புருஷனை, கீழே தள்ளி அவன் மேல் 53 தேவதைகள் அவன் முதுகில் அமர்ந்த இடம் தான் வாஸ்து மண்டலம் என்று குறிப்பிடப்படுகிறது. வாஸ்து மண்டலம் சதுரமாக அமைந்திருக்கும். வாஸ்துவை பிரம்மதேவன் காப்பாற்றி அருளியதால், வீட்டின் நடுபாகம் பிரம்மாவுக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை பிரம்ம ஸ்தானம் என்றே விவரிக்கிறது மனையடி சாஸ்திரம்.

    மேலும் படிக்க...  Vastu tips | காலையில் எழுந்தவுடன் இந்த பொருட்களை பார்க்காதீர்கள்...

    வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாட்கள்

    ஒரு வருடத்தில், வாஸ்து புருஷன் விழிக்கும் நாட்கள் என்று ஜோதிட வல்லுநர்கள் குறித்திருக்கிறார்கள். சித்திரை 10ம் தேதி, வைகாசி 21ம் தேதி, ஆடி 11ம் தேதி, ஆவணி 6ம் தேதி, ஐப்பசி 11ம் தேதி, கார்த்திகை 8ம் தேதி, தை 12ம் தேதி, மாசி 22ம் தேதி. வாஸ்து பகவான், தினமும் தூங்கும் போது அசைந்து அசைந்து, ஒரு இடம் இல்லாமல் மாறுவாராம். இதனால் சில மாதங்களில் அவர் படுக்கும் திசை மாறிவிடுகிறது என்பார்கள். வாஸ்து பூஜை சரியாகச் செய்தபின் கட்டடம் கட்ட ஆரம்பிக்க, எல்லாம் நலமாகவும் சுபமாகவும் வளமாகவும் முடியும் என்பது ஐதீகம்.

    வாஸ்து புருஷனைப் பின்பற்றி குறிப்பிட்ட செயல்களை மேற்கொள்ளும்போது இயற்கையின் ஒத்துழைப்புடன் வீட்டைக் கட்டி முடிக்க முடியும். இடையூறுகள் ஏற்படாது. மேலும் குடும்பத்தில் சுபிட்சம் குடிகொள்ளும்.

    மேலும் படிக்க... Vastu: இந்த 7 வாஸ்து குறிப்புகள் உங்கள் வீட்டுக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும்...

    இன்றைய தினம் ஜனவரி 25ம் தேதி திங்கட்கிழமை வாஸ்து நாள். காலை 10.41 முதல் 11.17 மணி வரை வாஸ்து நேரம். இந்த நேரத்தில், வீட்டைச் சுத்தப்படுத்துங்கள். சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து  விளக்கேற்ற வேண்டும். முடிந்தால், வெள்ளி விளக்கு ஏற்றுவதும் காமாட்சி விளக்கு ஏற்றுவதும் அளவற்ற நன்மைகளைத் தந்தருளும். கடன் தொல்லையில் இருந்து வாஸ்து புருஷன் மீட்டெடுப்பார். கவலைகளில் இருந்தும் திருஷ்டியில் இருந்தும் நீக்கி அருளுவார் வாஸ்து பகவான் என்பது நம்பிக்கை...

    மேலும் படிக்க... Vastu tips | வீட்டில் இந்த செடிகளை வளர்க்க கூடாதாம்... ஏன் தெரியுமா?
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Vastu

    அடுத்த செய்தி