ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

நாளை வாஸ்துநாள்... இல்லத்தில் சுபிட்சம் உண்டாக வாஸ்து பகவானை வணங்கிடுங்கள்...

நாளை வாஸ்துநாள்... இல்லத்தில் சுபிட்சம் உண்டாக வாஸ்து பகவானை வணங்கிடுங்கள்...

வாஸ்து பகவான்

வாஸ்து பகவான்

Vastu Day | வாஸ்து பகவானுக்கு என்று ஒரு நாள் உள்ளது. இந்த நாளில், இல்லத்தை தூய்மையாக்கி, வாஸ்து பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். அந்த எட்டு நாள்களிலும் வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஒரு வீட்டில் எந்த தெய்வங்களின் நிறைந்திருந்தாலும் மிக முக்கியமானதொரு சக்தியாகவும் அந்த வீட்டை கோலோச்சுபவராகவும் வாஸ்து பகவான் திகழ்கிறார். வாஸ்து பகவான், வாஸ்து புருஷன் என்றெல்லாம் வாஸ்து பகவானை விவரிக்கிறது வஸ்து சாஸ்திரம். வாஸ்து பகவானுக்கு என்று ஒரு நாள் உள்ளது. இந்த நாளில், இல்லத்தை தூய்மையாக்கி, வாஸ்து பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். அந்த எட்டு நாள்களிலும் வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார். பிறகு மீண்டும் தூங்கச் சென்றுவிடுவார். 

மேலும் வீட்டுக்கு பூமி பூஜை, அஸ்திவாரம் எழுப்புதல், கட்டடம் கட்டுதல், நிலை வாசல் அமைத்தல், கிரகப் பிரவேசம் செய்தல், வீட்டில் பூஜைகளை மேற்கொள்ளுதல் என்று எதைச் செய்வதாக இருந்தாலும் முகூர்த்த நாளில் செய்வது போல், வாஸ்து நாளிலும் செய்யலாம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டின் வாஸ்துநாள் கடந்த ஜனவரி மாதம் முடிந்ததை அடுத்து, 2-வது வாஸ்த்துநாள் நாளை மார்ச் 6ஆம் தேதி மாசி மாதம் 22ஆம் தேதி வருகிறது. அந்த நாளில் முறையே வாஸ்து பகவானை வழிபடுவதும் பூஜிப்பதும் பிரார்த்தனை செய்வதும் விசேஷமானவை. அதுமட்டுமல்லாமல் இதுவரை வீட்டில் இருந்த தரித்திரங்களையெல்லாம் போக்கியருளுவார் வாஸ்து பகவான்.

அதேபோல், கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுப்பார். கவலைகள், திடீர் சண்டைகள், வீண் மனஸ்தாபங்கள் முதலானவற்றில் இருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் போக்கி, குடும்பத்தில் நிம்மதியையும் அமைதியையும் ஆனந்தத்தையும் செல்வத்தையும் வழங்கி அருளுவார் வாஸ்து பகவான்.

மேலும் இந்த வாஸ்து நாட்களில், இல்லத்தை சுத்தமாக்கி வீடு முழுக்க தீப தூப ஆராதனைகள் செய்து, சர்க்கரைப் பொங்கல், கேசரி முதலான இனிப்பு வகைகளை நைவேத்தியம் செய்து அக்கம் பக்கத்தாருக்கு வழங்கினால் சிறப்பு. அத்துடன் வாஸ்து நேரத்தில் வீட்டிலும் வாசலிலும் விளக்கேற்றி வழிபடுங்கள். இல்லத்தில் சுபிட்சத்தையும் ஐஸ்வரியத்தையும் குடிகொள்ளச் செய்வார் வாஸ்து பகவான்.

மேலும் படிக்க...  Vastu tips | காலையில் எழுந்தவுடன் இந்த பொருட்களை பார்க்காதீர்கள்...

முக்கியமான சில வாஸ்த்து குறிப்புகள்

1. வீட்டின் கிழக்கில் தான் குளியல் அறை அமைத்தல் வேண்டும்.

2. வீட்டில் சாப்பிடுமிடம் மேற்கிலும் சாப்பிடும் போது கிழக்கு திசை பார்த்து சாப்பிட வேண்டும்.

3. வீட்டின் வடமேற்கில் தான் தானியக் கிடங்கு இருத்தல் வேண்டும்.

4. வீட்டின் வடக்கில் தான் பணம் வரவு வைத்தல் எடுத்தல் வேண்டும்.

5. வீட்டின் வடகிழக்கு திசையில் தான் இறைவழிபாடு, தியானம் செய்தல் உயர்வானது.

மேலும் படிக்க... Vastu: இந்த 7 வாஸ்து குறிப்புகள் உங்கள் வீட்டுக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும்...

6. வீட்டின் நடுவில் சந்திப்புக் கூடம் இருத்தல் வேண்டும்.

7. வீட்டின் உள்ளே சூரிய ஒளி விழுதல் மிக மிக உயர்வானது.

8. எதிர்வீட்டின் தலைவாசலுக்கு எதிரில் நம் வீட்டு தலைவாசல் இருக்கவே கூடாது.

9. தலைவாசல், கடைவாசல் நேர் எதிரில் சூரிய ஒளிபடியுமிடமான முற்றத்தில் துளசி மடம் அமைத்து வழிபடுதல் நல்லது.

10. வீட்டின் முன்புறம் பூச்செடிகளும், பின்புறம் பலன் தரும் மரங்களும் இருப்பது மிக மிக நல்லது.

மேலும் படிக்க... Vastu tips | வீட்டில் இந்த செடிகளை வளர்க்க கூடாதாம்... ஏன் தெரியுமா?

First published:

Tags: Vastu, Vastu tips