Home /News /spiritual /

Vastu Tips : வீடு கட்ட தேவையான சில வாஸ்து குறிப்புகள்...

Vastu Tips : வீடு கட்ட தேவையான சில வாஸ்து குறிப்புகள்...

வாஸ்து

வாஸ்து

Vastu Tips : வீடு கட்டும் போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில் கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும். வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கிணறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.

    வாஸ்து சாஸ்திரம் நமது இந்திய தேசத்தின் பாரம்பரிய கட்டிடக் கலை ஆகும். கட்டிடங்களின் தள அமைப்பு, அளவீடுகளை திசைகளின் தத்துவ முறைகளுக்கு ஏற்ப விஞ்ஞானப் பூர்வமாகவும், மெய்ஞானப் பூர்வமாகவும் அலசி ஆராய்ந்து வாழ்விடங்களுக்குத் தேவையான வாழ்வியல் குறிப்புகளை தந்துள்ள பொக்கிஷக் குறிப்புகள் ஆகும்.

    உறக்கத்தில் இருந்த வாஸ்துபகவான் இன்று விழிக்கும் நாள். இன்று தை மாதம் 12ஆம் தேதி 25.01.2022 திங்கட்கிழமை காலை 10.41 முதல் 11.17 மணி வரை வாஸ்து நேரம். இந்த நேரம் வாஸ்து பகவான்  விழிப்பு நேரம் என்பதால், அந்த நேரத்தில் வாஸ்து பகவானை வழிபட தடைபட்டிருந்த வீடு மனை கட்டிடப்பணிகள் சிறப்படையும். வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்க நாம் சில விசயங்களை செய்தால் தோஷங்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். அவற்றிற்கான சில முக்கியமான குறிப்புகளை தெரிந்துக் கொள்ளலாம்...

    1. வீட்டுமனை சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய வேண்டும்.

    2. வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம்.

    3. மழைநீர் ஈசானிய மூலை வலியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது.

    4. வீட்டுக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது.

    5. வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருப்பது நல்லது.

    6. மனையில் வீடு கட்டும் போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில் கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும். வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கிணறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.

    7. வீட்டின் தெற்கும், மேற்க்கும் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில் அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும்.

    மேலும் படிக்க... வாஸ்து பகவானை வழிபட இன்று உகந்த நாள்...

    8. வீடு கட்ட கடைக்கால் தோண்டும் போது முதலில் ஈசானியத்தில் ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும். வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும்.

    9. தென்மேற்கு மூலை 90 டிகிரி சரியாக இருக்க வேண்டும்.

    10. வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும்.

    11. பஞ்சபூத ஆற்றல் கிடைக்க ஈசானிய மூலை காலியாக இருக்க வேண்டும். மாலையில் விளக்கேற்ற சுபிட்சமுண்டாகும்.

    12. வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள் அமைய வேண்டும். வீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே நல்லது.

    மேலும் படிக்க... Vastu tips | காலையில் எழுந்தவுடன் இந்த பொருட்களை பார்க்காதீர்கள்...

    13. கழிவுநீர் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி செல்ல வேண்டும். கழிப்பிடம் தெற்கு அல்லது வடக்கு நோக்கி அமருமாறு அமைய வேண்டும். செப்டிக் டேங்க் வடமேற்கு அல்லது தென்கிழக்கே காம்பவுண்டு சுவரை தொடாமல் கட்ட வேண்டும்.

    14. தென் மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் நீர் உபயோகத் தொட்டி அமைய வேண்டும்.

    15. அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அமைவது நல்லது.

    16. வீடு மற்றும் காம்பவுண்டின் வடகிழக்கு மூலை வளைவாக இருக்க கூடாது.

    17. மாடிப்படி தென்மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் அமைய வேண்டும்.

    18. வீட்டிற்கு தெற்கு மேற்கு உயர்ந்து இருக்க வேண்டும்.

    19. வடகிழக்கில் குடிநீர் குழாய் இருத்தல் வேண்டும்.

    20. ஈசானிய மூலையில் மண் அமைத்து அருகம்புல், துளசி வளர்ப்பது நல்லது. உயரமான துளசி மாடம் கட்டக்கூடாது. ஈசானிய மூலையில் மாடிப்படி கூடாது. ஈசானிய மூலையில் சமையல் அறை கூடாது. ஈசானிய மூலையில் குப்பை கூளங்களை குவித்தல் கூடாது.

    மேலும் படிக்க...  Vastu: இந்த 7 வாஸ்து குறிப்புகள் உங்கள் வீட்டுக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும்...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Vastu, Vastu tips

    அடுத்த செய்தி