ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

இன்று வாஸ்து நாள்... இந்த வாஸ்து குறிப்புகள் உங்கள் வீட்டுக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும்...

இன்று வாஸ்து நாள்... இந்த வாஸ்து குறிப்புகள் உங்கள் வீட்டுக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும்...

வாஸ்து

வாஸ்து

Vastu day | வாஸ்து பகவானுக்கு என்று ஒரு நாள் உள்ளது. இந்த நாளில், இல்லத்தை தூய்மையாக்கி, வாஸ்து பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். அந்த வகையில் இந்த 2022ஆம் ஆண்டில் வரும் 3வது வாஸ்து நாள் இன்று...அந்த எட்டு நாள்களிலும் வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஒரு வீட்டில் எந்த தெய்வங்கள் நிறைந்திருந்தாலும் மிக முக்கியமானதொரு சக்தியாகவும் அந்த வீட்டை கோலோச்சுபவராகவும் வாஸ்து பகவான் திகழ்கிறார். வாஸ்து பகவான், வாஸ்து புருஷன் என்றெல்லாம் வாஸ்து பகவானை விவரிக்கிறது வஸ்து சாஸ்திரம். வாஸ்து பகவானுக்கு என்று ஒரு நாள் உள்ளது. இந்த நாளில், இல்லத்தை தூய்மையாக்கி, வாஸ்து பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். அந்த எட்டு நாள்களிலும் வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார். பிறகு மீண்டும் தூங்கச் சென்றுவிடுவார். இந்த பதிவில் சில முக்கியமான வீட்டுக்கான வாஸ்து குறிப்புகளை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...

  வீட்டின் வாசல் சுத்தமாக இருத்தல் நல்லது

  சுத்தமான வாசல் உங்கள் வீட்டில் இருந்து எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றிவிடும். எனவே, உங்கள் வாசல் ஒழுங்காக சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்யவும். முடிந்தால் அதில் அழகாக கோலங்கள் போட்டு லட்சுமி தேவியை வரவேற்கலாம்.

  வீட்டில் மணி ஓசை கேட்டால் நல்லது

  வீட்டினுள் காற்றில் அசையும் மணிகளை கட்டி வைப்பது நல்லது. அது காற்று வீசும் போது மிகவும் மென்மையான இசைகளை ஏற்படுத்தும். இது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வளாகத்திலிருந்து வெளியேற்றுகிறது. டிங்கிங் மணி ஓசைகள் எதிர்மறை ஆற்றலை அழிக்க உதவுகிறது மற்றும் நேர்மறையான ஆற்றல் அதிகரித்து வீட்டில் மகிழ்ச்சி சுபகாரியம் ஆகியவை நடக்க வழிவகுக்கும்.

  மேலும் படிக்க... Vastu Days: 2022ஆம் ஆண்டுக்கான வாஸ்து நாட்கள் குறித்த தகவல்கள்...

  வீட்டில் கல் உப்பு இருப்பது நல்லது

  கல் உப்பு ஒரு மருந்து என்று அறியப்படுகிறது. எதிர்மறை சக்தியை அழிக்க உங்கள் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் கல் உப்பு உள்ள ஒரு கிண்ணத்தை வைத்துக் கொள்ளுங்கள். அது போல தண்ணீரில் உள்ள எலுமிச்சை உங்கள் வீட்டிலிருந்து எதிர்மறையான ஆற்றலைக் அழித்து நேர்மறை ஆற்றலை தருகிறது. அதனால் ஒரு குடுவையில் தண்ணீர் நிரப்பி ஒரு எலும்பிச்சை பழத்தை போட்டு வையுங்கள்.

  தினமும் விளக்கு ஏற்றுதல்

  ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தல் நல்லது. இந்த விளக்கு ஏற்றும் முறை, வீட்டிலிருந்து எதிர்மறையான எரிசக்திகளை அகற்றிவிடும். அத்துடன் வீட்டின் வெளிபுறத்தில் கண்ணாடியை மாற்றி வைப்பது நல்லது. அதுவும் எதிர்மறை ஆற்றலை வெளியேற்றும்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Vastu, Vastu tips