ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

வீடு, மனை வாங்கும் தடை அகல வரும் வியாழக்கிழமை அன்று இதை செய்தால் போதும்!

வீடு, மனை வாங்கும் தடை அகல வரும் வியாழக்கிழமை அன்று இதை செய்தால் போதும்!

வாஸ்து நாளில் வாஸ்து பகவான் வழிபாடு

வாஸ்து நாளில் வாஸ்து பகவான் வழிபாடு

Vastu Day | சொந்த வீடு சுபிட்சமாக இருக்கும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் விரைவில் சொந்த வீடு கட்டுவார்கள். பூமி சம்பந்தமான தொழில் சிறந்து விளங்கவும் வாஸ்து தோஷங்கள் அகலவும் வாஸ்து பகவானை வணங்குவது நல்லது

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வீடு, மனை, கட்டிடங்களின் அமைப்பை தீர்மானிப்பது தான் வாஸ்து சாஸ்திரம். இந்த வாஸ்து சாஸ்திரத்தின் அதிபதியே ஸ்ரீ வாஸ்து புருஷர் ஆவார். தமிழ் மாதங்கள் நான்கு மாதங்கள் தவிர ஏனைய 8 மாதங்களில் வாஸ்து பகவான் பூஜை செய்யும் நாட்கள் வரும். தற்போது கார்த்திகை மாதத்தில் வரும் வியாழக்கிழமை - கார்த்திகை  08 - 24.11.2022 அன்று வாஸ்து பகவான் நாள் வருகிறது.

  அன்றைய தினம் காலை 10.54 முதல் 11.30 வரை வாஸ்து பூஜைக்கான நல்ல நேரம். சூரியன் சஞ்சாரம் செய்யும் ராசிகளில் முறையே மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிகளை நாம் சித்திரை மற்றும் கார்த்திகை மாதங்களில் வரும் நாட்களில் வாஸ்து பூஜை செய்வது நன்மை தரும். இந்த நேரத்தில் வாஸ்து பகவானை வழிபட தடைபட்டிருந்த வீடு மனை கட்டிடப்பணிகள் சிறப்படையும்.

  வீட்டிற்குள் இருக்கும் தோஷங்கள் அகல இந்த நாளில் நாம் வாஸ்து பகவானை வழிபடுவது சிறந்தது.

  வாஸ்து என்றால், பொருள்கள் அதாவது வஸ்துக்கள் இருக்கும் இடம் என்று பொருள். வாஸ்து முறைப்படி வஸ்துக்களை அமைத்தால் வாஸ்து புருஷனின் ஆசிகள் பெற்று வளமோடு வாழலாம். மனிதன் ஏற்படுத்திக் கொண்ட வசதி வாய்ப்புகளை இயற்கைச் சக்திகளோடு ஒருங்கிணைக்கும் ஓர் அறிவியல்தான் வாஸ்து சாஸ்திரம்.

  வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது.

  சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம். ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வாஸ்து நாட்கள் வரும். அந்த எட்டு நாள்களிலும் வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார். பிறகு மீண்டும் தூங்கச் சென்றுவிடுவார். இந்த நேரத்தை வாஸ்து பூஜை, பூமி பூஜை செய்வதற்கு உகந்த நேரம் ஆகும்.

  வாஸ்து புருஷன் விழித்திருக்கும் நாட்கள் தவிர, மற்ற சுப நட்சத்திரங்களில் வாஸ்து பூஜை செய்யலாம். அவ்வாறு செய்யும் நாட்களில் லக்னம் மற்றும் ஹோரை பார்த்து செய்யும் நாள் சிறந்தது. வாஸ்து பூஜை செய்ய ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் சிறந்தவை.

  பூமிபூஜையின் போது வாஸ்து ஹோமம் மற்றும் பூஜை செய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும். இன்றைய தினம் சொந்த வீட்டில் வசிப்பவர்களும், வாடகை வீட்டில் வசிப்பவர்களும் வீட்டை சுத்தம் செய்து, நிலைப்படிகளுக்கு மஞ்சள் பூசி குங்குமம் வைத்து பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடலாம்.

  Also see... Vastu Days: 2022ஆம் ஆண்டுக்கான வாஸ்து நாட்கள் குறித்த தகவல்கள்...

  சொந்த வீடு சுபிட்சமாக இருக்கும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் விரைவில் சொந்த வீடு கட்டுவார்கள். பூமி சம்பந்தமான  தொழில் சிறந்து விளங்கவும் தடைப்பட்ட கட்டிடப் பணிகள் விரைவில் முடியவும் வீடு மனை போன்றவைகளில் உள்ள வாஸ்து தோஷங்கள் அகலவும் வாஸ்து பகவானை வணங்கலாம்.

  வாஸ்து பகவான்

  சிறிய தொழில், பெரிய தொழில் செய்வோர்க்கும், வியாபாரம் செய்வோர்க்கும் மற்றும் பலவகை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும், குடும்ப பெண்களுக்கும் சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்ற கனவு உண்டு.

  இதற்காக அவரவர் தங்கள் சக்திக்கு ஏற்ப வீட்டு மனைகளை வாங்குவதும் , தான் குடியிருக்கும் வாடகை வீட்டை விலைக்கு வந்தால் வாங்கலாம் என்பதும் சிலர் நினைப்பதும் உண்டு. அப்படி வாங்கிய மனைகளில் எப்போது பூமி பூஜை போட்டு தொடங்க வேண்டும் என்பது பற்றி சிலருக்கு கேள்வியாக இருக்கும்.

  வாஸ்து சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள் அமைத்துக் கொள்ளவும், பழைய வீடுகளை புதுப்பித்துக் கொள்ளவும், காலி மனை, இருப்பிடம், நிலம், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழி செய்யும்.

  Also see...Vastu: இந்த 7 வாஸ்து குறிப்புகள் உங்கள் வீட்டுக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும்...

  வரும் வியாழக்கிழமை 24.11.2022 வாஸ்து நாளாகும். வாஸ்து பூஜை செய்யும் போது வாஸ்து சாந்தி ஹோமமும் மனை பூஜையும், மந்யு சூக்த ஹோமமும் செய்வது சிறந்தது.

  -ராமகிருஷ்ணன் ஜோசியர், பெருங்குளம்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Vastu