ஆடி மாதப் பண்டிகைகளில் மிகவும் விசேஷமான பண்டிகை வரலட்சுமி நோன்பு. மற்ற அம்மன் பூஜைகள் அல்லது நோன்புகள் போல அல்லாமல், வரலட்சுமி நோன்பு கொஞ்சம் வித்தியாசமானது. பெண்கள் அம்மனை அழகாக அலங்கரிப்பது முதல் விரதம் இருந்து பூஜை செய்து நோன்பு கயிறு கட்டிக் கொள்வது வரை, ஒவ்வொரு பகுதியையும் மிகவும் பக்தியோடும், சிரத்தையோடும் செய்வார்கள். வரலட்சுமி விரதம் என்பது இந்த ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று வருகிறது. ஆனால், பூஜைக்கான ஏற்பாடு முதல் நாளே தொடங்கிவிடும். வரலட்சுமி பூஜை எப்படி செய்வது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
வரலட்சுமி பூஜைக்கு தேவையான பொருட்கள்:
முதல் நாள் / அதிகாலை தயார் செய்ய வேண்டியது..
மண்டபம் – மரத்தாலான ஸ்டூலை சுத்தம் செய்து அலங்கரிக்கலாம்
கலசம் (வெள்ளி / பித்தளை சொம்பு)
அம்மன் முகம் (கடைகளில் கிடைக்கும். அல்லது முகம் வரையத் தெரிந்தவர்கள் கலசத்தில் வரைந்து கொள்ளலாம்)
மஞ்சள் கன்று / வாழைக்கன்று / மாவிலை தோரணம்
சந்தனம், ஏலக்காய், ஜாதி பத்ரி கலந்த தூய்மையான வாசனை நீர் (கலசத்தை நிரப்ப வேண்டும்)
மாவிலைகள்
வரலட்சுமி பூஜை தொடங்கும் முன்பு தயாராக வைத்திருக்க வேண்டியது..
சந்தனம் (சந்தனக்கல் பயன்படுத்தி இழைத்தது), மஞ்சள், குங்குமம்
அரிசி மாவு & செம்மண்
புதிய பட்டுத்துணி (சிவப்பு அல்லது பச்சை நிறம்), ஆபரணங்கள்
மஞ்சள் கயிறு (ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும்)
பூஜையின் போது அம்மனுக்கு ஆராதனை செய்ய..
குங்குமம்
காசுகள்
பூ மாலைகள், உதிரி பூக்கள் (அரளி, சாமந்தி, ரோஜா)
அட்சதை
தாம்பூலத்தில் வைக்க..
வெற்றிலை பாக்கு
வாழைப்பழம் மற்றும் இதர பழங்கள்
பால்
பன்னீர்
தீபாராதனை செய்ய நெய் விளக்கு, ஊதுபத்தி, கற்பூரம்
Also Read : சர்வ ரோக நிவாரணி புன்னை நல்லூர் மாரியம்மன்.!
நைவேத்தியம் செய்ய வேண்டியவை: கொழுக்கட்டை, வெள்ளை கடலை சுண்டல், பச்சரிசி மாவில் செய்த இட்லி, வெல்ல அப்பம், தயிர், பசும்பால், தேன், பஞ்சாமிர்தம்
பூஜைக்கான முன்-தயாரிப்பு:
வரலட்சுமி நோன்பிருக்கும் முதல் நாளே, அம்மனை வைக்கப் போகும் மண்டபத்தை சுத்தம் செய்து, சந்தனம், மஞ்சள் தடவி, குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். மண்டபத்தின் கால்களில் மஞ்சள் கன்று, வாழைக்கன்று அல்லது மாவிலைத் தோரணங்களைக் கட்ட வேண்டும்.
கலசத்தில் வாசனை நீரை ஊற்றி, மாவிலைகளை வைத்து தயாராக வைத்திருக்க வேண்டும். கலசத்தில் அம்பாள் முகத்தை வரைந்து வைத்தாலும் சரி, கடைகளில் கிடைக்கும் அம்பாள் முகத்தை வாங்கி வைத்தாலும் சரி, நன்றாக அலங்கரிக்க வேண்டும்.
கலசமும் மண்டபமும் வைக்கும் இடத்தில், அரிசி மாவில் கோலமிட்டு செம்மண் பூச வேண்டும்.
மண்டபத்துக்கு முன் வாழையிலை பரப்பி, அரிசியால் நிரப்ப வேண்டும்.
Also Read : வறுமை நீக்கும் மகாலட்சுமி பூஜை செய்வது எப்படி.!
அலங்கரிக்கப்பட்ட கலசத்தை வீட்டு வாயிலில் இருந்து பூஜை செய்யும் இடத்துக்குக் கொண்டு வர வேண்டும். இது தான் அம்பாளை அழைப்பதாகும். மண்டபத்தில் கலசத்தை வைத்து, ஆரத்தி எடுத்து மனதார பிராத்தனை செய்து கொள்ளுங்கள்.
வரலட்சுமி பூஜை:
வரலட்சுமி விரத நாளன்று, அதிகாலையே எழுந்து, தலைக்கு குளித்து, நோன்புக்கான நைவேத்திய உணவுகளை சமைக்க வேண்டும்.
அதே நேரத்தில், அம்மனை வைத்திருக்கும் மண்டபத்தில் குத்து விளக்கு மற்றும் நெய் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
பூஜைக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
பட்டுத் துணியை கலசத்தை சுற்றி சார்த்தி, பூக்களால் அலங்கரியுங்கள்.
நோன்புக் கயிறுகள் அனைத்தையும் கலசத்தின் முன்பு வைக்க வேண்டும்.
அனைத்தையும் தயார் செய்த பிறகு, பிள்ளையார் பூஜை செய்து நோன்புக்கான பூஜையைத் தொடங்கலாம்.
மகாலட்சுமி ஸ்தோத்திர புத்தகத்தில் உள்ள வரலட்சுமி பூஜை விதிகளைப் பின்பற்றி, ஒவ்வொரு ஸ்தோத்திரமாகப் பாராயணம் செய்து, குங்கும அர்ச்சனை, பூக்களால் அர்ச்சனை, பால், பன்னீர் வைத்து பூஜை செய்யலாம்.
Also Read : திருமண தடை, குழந்தை வரம் உள்ளிட்ட பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் அம்மன் கோயில்கள்.!
பூஜை முடிந்த பின்னர், சமைத்து வைத்த நைவேத்தியங்களை வைத்து தீபாராதனை காட்டி, அம்மனுக்கு ஒரு நோன்புக் கயிறை சாற்ற வேண்டும். பின்னர், வீட்டில் இருக்கும் மூத்த பெண்மணி நோன்புக் கயிறு கட்டிக் கொள்ள வேண்டும்.
கையில் வெற்றிலைப் பாக்கு கொடுத்து, காலில் நலங்கு வைத்து, நோன்புக் கயிறைக் கட்ட வேண்டும். திருமணமான பெண்கள் கழுத்திலும், திருமணம் ஆகாதவர்கள், சிறுமிகள் கையிலும் கட்டிக் கொள்ளலாம்.
கயிறு கட்டிக் கொண்ட பின்னர், அட்சதை தூவி, அம்பாளை வணங்கி, வீட்டில் உள்ள பெரியவர்களையும் வணங்க வேண்டும்.
பூஜை செய்தவர்கள், நைவேத்தியத்துக்கு அம்பாளுக்கு படைத்த உணவை மட்டுமே சாப்பிட்டு நாள் முழுவதும் விரதம் இருக்கலாம். மாலையில் மீண்டும் விளக்கேற்றி, தீபாராதனை செய்யலாம். வீட்டுக்கு வரும் பெண்களுக்கு, இயன்ற அளவுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலத்துடன் ஆடைகள், தேங்காய், இனிப்பு என்று கொடுக்கல
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadi