முகப்பு /செய்தி /ஆன்மிகம் / Varalakshmi Viratham 2021 | செல்வத்தை தரும் வரலட்சுமி விரத நேரம் இதோ!

Varalakshmi Viratham 2021 | செல்வத்தை தரும் வரலட்சுமி விரத நேரம் இதோ!

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம்

இந்து பண்டிகைகளில் மிகவும் முக்கியமான ஒரு பண்டிகை வரலக்ஷ்மி விரதமாகும். பெண்கள் தங்களின் கணவரின் ஆயுட்காலம் அதிகரிக்க லக்ஷ்மி தேவியை வழிபடும் சிறப்பான பூஜை. இது வரலக்ஷ்மி நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது.

  • Last Updated :

வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும். லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும். வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

பதினாறு வகை செல்வத்தையும் வழங்கக்கூடிய மகா லட்சுமி தேவியை நினைத்து இருப்பது வரலட்சுமி விரதம். மங்களத்தையும், மாங்கல்ய பலத்தையும் அளிக்கக்கூடிய இந்த விரதத்தை கன்னிப் பெண்களும், திருமணமான சுமங்கலி பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும் படிக்க... Varalakshmi Vratham 2021 | வரலட்சுமி விரதத்தின் புராணக்கதை!

வரலட்சுமி விரதம் தேதி, நேரம்

வரலட்சுமி விரதம் ஆடி பெளர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் இந்த வருடம் ஆவணி மாதத்தில் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வருகிறது.  வெள்ளிக் கிழமையில் பொதுவாக காலை 9.15 - 10.15 வரையிலும், மாலை 4.45 முதல் 5.45 வரை நல்ல நேரமாக உள்ளது.இந்த நேரத்தில் வரலட்சுமி பூஜை செய்ய சிறந்த நேரம். அப்படி இல்லை என்றால், பொதுவாக வீட்டில் விளக்கேற்றும் அந்தி சாயும் நேரத்தில் பூஜை செய்வது நல்லது.

சில பெண்கள் உடல் பிரச்னை காரணமாக இந்த வரலட்சுமி விரதத்தை வரும் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்க முடியாவிட்டால், அடுத்து வரும் வெள்ளிக்கிழமை தினத்தில் கடைப்பிடிக்கலாம்.

அப்போதும் கடைப்பிடிக்க முடியாத சூழல் நவராத்தி 9 நாட்களில் வரும் வெள்ளிக்கிழமை தினத்தில் இந்த விரதத்தை மேற்கொண்டால் மகாலட்சுமியின் அருள் அப்போதும் பரிபூரணமாக கிடைக்கும்.

வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கும் முறை

தேங்காயில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு அம்மன் திரு முகத்தை வைக்க வேண்டும். அம்மன் முகம் சந்தனத்தால் செய்தோ அல்லது வெள்ளி முகம் வைத்தோ வாசலுக்கு அருகில் அம்மனை  வியாழக்கிழமையான இன்று இரவே வைத்து விட வேண்டும். பின்னர்  நாளை வரலட்சுமி விரதம் அன்று அதிகாலையில் குளித்து விட்டு வாசல் தெளித்து கோலமிட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க... Varalakshmi Viratham 2021 | வரலக்ஷ்மி விரதம் இருந்தால் அஷ்டலட்சுமிகளும் வீட்டுக்குள் வருவார்கள்...

பின்னர் பூஜை செய்யப் போகுமிடத்தில் இழை கோலம் போட்டு சித்தமான ஒரு தட்டில் அட்சதையைப் பரப்பி அம்மனை ஆவாஹனம் செய்யப் போகும் கலசத்தை வைக்க வேண்டும். கலசத்தினுள் அட்சதையுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள் ஒரு வெள்ளிக் காசு மற்றும் ஒரு எலுமிச்சைப் பழமும் வைத்து மாவிலையைக் கலசத்தின் மீது வைக்க வேண்டும். பின்னர்  அதன் மீது தேங்காயை வைக்க வேண்டும். அம்மனின் முகத்தைக் கலசத்தோடு இணைத்து வைத்து விளக்கேற்றி வெண்பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும்.

பின் பிள்ளையாருக்கு பூஜை செய்ய வேண்டும். அஷ்ட லட்சுமிகளுக்கு பிடித்தமான அருகம் புல் தூவி பூஜை செய்யலாம். பூஜையின் போது மகாலட்சுமி ஸ்தோத்திரம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஆகியவற்றை படிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Temple