வரலட்சுமி விரதம் 2020 : இன்று நோன்பு இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

Varalakshmi Viratam 2020

வரலட்சுமி விரதம் 2020 : இன்று நோன்பு இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
வரலட்சுமி விரதம்
  • Share this:
வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி இருக்கும் விரதமாகும்.

ஆடி மாதத்தில் பெளர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் இந்த வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவின் வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி இந்துக்களின் நோன்பாகும்.

துணைவியும், செல்வங்களை அளித்தருளக்கூடிய மகாலட்சுமி தேவியை போற்றி வணங்கி அவரின் அருளாசி பெறுவதே இந்த விரதத்தின் நோக்கம்.


இந்த விரதத்தின் முக்கியத்துவமே சுமங்கலி பெண்கள் தங்களின் கணவன் நீண்ட ஆயுளுடன் எந்த குறையும் இல்லாமல் வாழ வேண்டும்.

சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து அம்பிகையை எண்ணி உணவு கொடுத்து வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, ரவிக்கைத்துணி, இனிப்பு, பழம் ஆகிய பொருட்களை தாம்பூலமாக கொடுத்து உபசரிக்க வேண்டும் இவ்வாறு செய்வதால் தீர்க்க சுமங்கலியாக வாழும் வரத்தை நமக்கு தருகிறாள் அன்னை வரலட்சுமி. சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுப்பதால் கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் அன்னை மகாலஷ்மியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

தொழில் சிறக்க வேண்டும். அதனால் கிடைக்கும் தனம், பொருள் வரவு மூலம் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியான குடும்பத்தை அனுபவிக்க வேண்டும் என எல்லா வரத்தையும் தரக்கூடிய மகாலட்சுமி தேவியை நினைத்து கடைப்பிடிக்கக்கூடிய விரதமாகும்.சுமங்கலி பெண்கள் மட்டுமல்லாமல் கன்னி பெண்களும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கின்றனர். கன்னிபெண்கள் இந்த நோன்பு இருப்பதன் முக்கிய நோக்கம் நல்ல கணவன் அமைய வேண்டும் என லட்சுமியை வணங்கி விரதம் இருக்கின்றனர்.

வரலட்சுமியை வணங்குவதன் மூலம் ஒருவர் அஷ்ட லட்சுமியின் ஆசீர்வாதத்தை பெறலாம்

மகாலட்சுமி லட்சுமி -ஆன்மீகக் கற்றளைத் தூண்டுபவர் அல்லது பாதுகாப்பவர்
தன லட்சுமி -செல்வத்தின் தெய்வம்
தைரிய லட்சுமி - தைரியத்தின் தெய்வம்
செளபாக்ய லட்சுமி - நல்ல அதிர்ஷ்டத்தின் தெய்வம்
விஜய லட்சுமி - வெற்றியின் தெய்வம்
தன்யா லட்சுமி - தானியங்களை அருள்பவர்
சந்தனா லட்சுமி - குழந்தைப் பேறு அருள்பவர்
வித்யா லட்சுமி - ஞானத்தின் தெய்வம்

இவ்வாறு, இந்த நாளில் ஒரு வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், பெண்கள் ஆன்மீக மற்றும் பொருள் செழிப்புக்காக அஷ்ட லட்சுமியின் ஆசீர்வாதங்களை பெற்றிட முடியும் என்பது ஐதீகம்.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading