முகப்பு /செய்தி /ஆன்மிகம் / வலங்கைமான் மாரியம்மன் கோவில் பாடை காவடி திருவிழா...!

வலங்கைமான் மாரியம்மன் கோவில் பாடை காவடி திருவிழா...!

வலங்கைமான் மாரியம்மன் கோவில்

வலங்கைமான் மாரியம்மன் கோவில்

Tiruvarur | திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள புகழ்பெற்ற பாடைகட்டி மகாமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் திருவிழாவின் நிகழ்வாக பூச்செரிதல் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் பூக்களை அம்மனுக்கு கொடுத்து வேண்டுதலை செலுத்தினர். இதில் முக்கிய பெருவிழாவான பாடகட்டி பெருவிழாவானது வருகிற 26 ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வரதராஜன் பேட்டை அருள்மிகு சீதளா தேவி என்கின்ற மகா மாரியம்மன் கோவில் பங்குனி பெருவிழா கடந்த ஞாயிறு 12-ம் தேதி முதல் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

வரும் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று அம்பாள் வெள்ளி அண்ண வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். 20ம் தேதி காமதேனு வாகனத்திலும் 21ம் தேதி வெள்ளி அன்ன வாகனத்திலும் 22ம் தேதி சிம்ம வாகனத்திலும் 23ம் தேதி ரிஷப வாகனத்திலும் 24 ம் தேதி யானை வாகனத்திலும் 25ம் தேதி குதிரை வாகனத்திலும் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து வருகின்ற மார்ச்  26ம் தேதி தமிழகத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாவான பாடை காவடி திருவிழா நடைபெற உள்ளது. 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1ம் தேதி வரை மற்றும் தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. அதனைத் தொடர்ந்து 15ம் நாள் புஷ்ப பல்லாக்கு விழா நடைபெற உள்ளது.

தொடர்ந்து ஒன்பதாம் தேதி அன்று கடை ஞாயிறு விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

செய்தியாளார்: ராஜசேகர், திருவாரூர்

First published:

Tags: Festival, Temple, Tiruvarur