உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு இப்படி உள்ளதா? அப்போ கடன் தான் அதிகரிக்கும்

வலம்புரி சங்கு

மஞ்சள், குங்குமம் இடாமல் இருக்கக்கூடிய, வலம்புரி சங்கு மிகவும் ஆபத்தானது. கட்டாயம் உங்கள் வீட்டில் கடன் சுமையை அதிகரித்துவிடும்.

 • Share this:
  வலம்புரி சங்கை வீட்டில் வைத்து பூஜை செய்து வந்தால் செல்வம் அதிகரிக்கும். சங்கு என்பது பொதுவாக மகாலட்சுமியின் அம்சமாக சொல்லப்படும். அதிலும் வலம்புரி சங்கு என்பது விஷேசமான ஒன்றாகும். அதனை முறையாக பூஜை செய்து வழிப்பட்டு வந்தால் வீட்டில் கஷ்டங்கள் மறைந்து மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். ஆனால் வலம்புரி சங்கினை இப்படி பயன்படுத்தினால் வீட்டில் கடன் தான் வந்து சேரும்.

  வீட்டில் மகாலட்சுமி தங்க வேண்டுமென்றால் வலம்புரி சங்கினை முறையாக பராமரித்து அதற்கு பூஜை செய்ய வேண்டும். அதற்கு மாறாக அதனை அழுக்குப்படிய வைத்து கேட்பாராற்று கிடந்தால்  வீட்டில் கடன் தான் அதிகரிக்கும். சங்கை வீட்டில் வைத்து கொள்ள முடியாதவர்கள் அதனை உரிய இடத்தில் கொடுத்து விடுவது மிகவும் நல்லது.

  வலம்புரி சங்கினை வீட்டில் வைத்து கொள்ள சில வழிமுறைகள் உள்ளது. பொதுவாக வலம்புரி சங்கினை காலியாக இருக்க வைக்க கூடாது. தரையில் வைக்கவே கூடாது. அதற்கு தண்ணீர் கொண்டாவது அபிஷேகம் செய்ய வேண்டும். வலம்புரி சங்கின் மீது அழுக்கு, தூசி படிய விடக்கூடாது.

  மஞ்சள், குங்குமம் இடாமல் இருக்கக்கூடிய, வலம்புரி சங்கு மிகவும் ஆபத்தானது. கட்டாயம் உங்கள் வீட்டில் கடன் சுமையை அதிகரித்துவிடும். வலம்புரிச் சங்கின் உள்ளே வாசனை நிறைந்த பன்னீர் கலந்த தண்ணீரை நிரப்பி, அதில் வெற்றிலை, துளசி, பச்சை கற்பூரம், ஏலக்காய், லவங்கம் போன்ற வாசனை மிகுந்த, மகாலட்சுமிக்கு பிடித்தமான பொருட்களை போட்டு வைப்பது வீட்டிற்கு அதிகப்படியான நன்மையை தேடித்தரும்.

  சங்கு கடலில் இருக்கும் பொருள். அதனை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் துர்வாடை ஏற்பட்டு வீட்டிற்கு கேடு ஏற்படலாம். ஜவ்வாது போன்ற வாசனை பொருட்களை அதன்மீது தடவி சுத்தம் செய்வது மிகவும் நல்லது. மேலும் வலம்புரி சங்கிற்கு பௌர்ணமி தினத்தன்று பாலிபிஷேகம் செய்தால் சந்திர பகவானின் அருளையும் பெறமுடியும்.
  Published by:Vijay R
  First published: