Home /News /spiritual /

Vaikunta Ekadasi 2022: வைகுண்ட ஏகாதசி 2022 எப்போது? நேரம் தேதி குறித்த தகவல்கள்..

Vaikunta Ekadasi 2022: வைகுண்ட ஏகாதசி 2022 எப்போது? நேரம் தேதி குறித்த தகவல்கள்..

பெருமாள்

பெருமாள்

ஸ்ரீரங்கம், திருப்பதி உள்ளிட்ட திருக்கோயில்களில் ஏற்கனவே ​டிசம்பர் 14ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட்ட நிலையில், மற்ற வைணத் திருக்கோயில்களில் வைகுண்ட ஏகாதசி கொண்டாடுவதற்கான பகல் பத்து தொடங்கி நடைப்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் ...
    மார்கழி மாதம் என்றாலே அது பெருமாளுக்குரியது என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட மார்கழியில் முக்கியமான நாள் வைகுண்ட ஏகாதசி. பெருமாள் பக்தர்களுக்கு வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியமான திருநாள். அன்றைய நாளில் விரதமிருந்து கண்விழித்து பெருமாளை தரிசனம் செய்வது சிறப்பு. அத்தகைய வைகுண்ட ஏகாதசி இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் 21 நாட்களும் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ஸ்ரீரங்க ரங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதித்தார். பின்னர் டிசம்பர் 14ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீரங்கத்தை போலவே திருமலை திருப்பதியிலும் மிகச் சிறப்பாக இந்த விழா கொண்டாடப்பட்டது. 

    2022ஆம் ஆண்டின் வைகுண்ட ஏகாதசி விழா

    மற்ற மற்ற வைணவத் திருக்கோயில்களில் வைகுண்ட ஏகாதசி திருநாளுக்கான பகல் பத்து ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஏகாதசி திதி ஜனவரி 12ஆம் தேதி இரவு தொடங்கி, ஜனவரி 13ஆம் தேதி இரவு வரை இருக்கிறது. அதனால் வைகுண்ட ஏகாதசி ஜனவரி 13ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  அதேபோல ஜனவரி 22ஆம் தேதி 2022 அன்று இராப்பத்து நாளின் 10ஆம் நாள் அனுசரிக்கப்பட்டு, ஜனவரி 23ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சம் அடைந்த நாளாக கொண்டாடப்படுகின்றது.

    மேலும் ஏகாதசி அன்று நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும். பெருமாள் சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி தரிசனம் கொடுக்க பக்தர்களும் அதே சொர்க்க வாசல் வழியாக வந்து பெருமாளை சேவிப்பது வழக்கம்.  அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி இந்த ஆண்டு 2 முறை அதாவது கார்த்திகை கடைசி நாளிலும் மார்கழியிலும் வந்துள்ளது.



    மேலும் படிக்க... நாராயணா ஹரி கோவிந்தா... ஏகாதசி சிறப்பு பெருமாள் பாடல்கள்...

    இதற்கு காரணம், ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படும். இதைப் பெரிய ஏகாதசி என்றும் கூறுவார்கள். மேலும் அனைத்து ஆலயங்களிலும் ஒரே நாளில் ஏகாதசி கொண்டாடுவதுதான் வழக்கம். ஆனால், பத்தொன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை இதேபோன்று ஶ்ரீரங்கத்துக்கும் பிற கோயில்களுக்கும் வேறுபாடு வருவது உண்டு. அந்த ஆண்டில் ஶ்ரீரங்கத்தில் மட்டும் கைசிக ஏகாதசியும் வைகுண்ட ஏகாதசியும் மாறிவரும் என்று கூறுகின்றனர்.

    மேலும் படிக்க... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இனி எந்த உற்சவமும் நடைபெறாது - கோவில் நிர்வாகம்

    எனவே பக்தர்கள் இதை மனதில் கொண்டு குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவரவர்கள் ஊரில் அருகே இருக்கும் பெருமாள் கோயிலில் கொண்டாடும் தினத்தில் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்தால் போதுமானது.  மேலும் எல்லா ஏகாதசி விரத நாள்களுமே மிகவும் முக்கியமானவைதான். எனவே பக்தர்கள் எந்த நாள்களிலும் விரதமிருந்து பெருமாளை வழிபடுவது நல்லதுதான்.

    மேலும் படிக்க... திருமண் துணையாகும்... பெருமாள் பக்தி பாடல்கள்...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Vaikunda ekadasi

    அடுத்த செய்தி