Home /News /spiritual /

vaikunta ekadasi 2021:வைகுண்ட ஏகாதசி தினத்தில் 10 நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்க வாசல் திறப்பு

vaikunta ekadasi 2021:வைகுண்ட ஏகாதசி தினத்தில் 10 நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்க வாசல் திறப்பு

திருப்பதி

திருப்பதி

பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த பட்டியல் இனத்தவர்கள், மீனவர்கள் ஆகியோரை சொர்க்க வாசல் திறந்திருக்கும் நாட்களில் திருப்பதி மலைக்கு அழைத்து வந்து இலவசமாக தரிசனம் செய்யும் வசதியை செய்து கொடுக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
    வைகுண்ட ஏகாதசி தினமான ஜனவரி மாதம் 13ஆம் தேதி முதல் பத்து நாட்கள் திருப்பதியில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவில் சொர்க்க வாசல் திறந்திருக்கும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.

    திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யாபவன் கூட்டரங்கில் நேற்று  நடைபெற்றது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஓய்.வி. சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் தேவஸ்தான உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஆலோசனை கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி,  அடுத்த மாதம் 13ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி தினமாகும். அன்று முதல் பத்து நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் திறந்திருக்கும். எனவே பக்தர்கள் பத்து நாட்களும் ஏழுமலையானை தரிசித்து வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம்.

    பிரம்மோற்சவ நாட்களில் செய்யப்பட்டது போல் பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த பட்டியல் இனத்தவர்கள், மீனவர்கள் ஆகியோரை சொர்க்க வாசல் திறந்திருக்கும் நாட்களில் திருப்பதி மலைக்கு அழைத்து வந்து இலவசமாக தரிசனம் செய்யும் வசதியை செய்து கொடுக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    இதையும் படிங்க: தென்காசி குற்றாலநாதர் கோவிலில் திருவாதிரை திருவிழா... வேத மந்திரங்களுடன் கொடி ஏற்றப்பட்டது....


    கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டால் புத்தாண்டு முதல் அதிகளவிலான பக்தர்கள் ஏழுமலையானை இலவசமாக தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
    இதுதவிர ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளிலும் பக்தர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.

    திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக ஸ்ரீவெங்கடேஸ்வரா நாம கோடி புத்தகங்கள் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் செயல்படும் ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெறும்.

    இதற்காக நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஏழுமலையான் கோவிலில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை நடைபெறும் அனைத்து சேவைகளையும் வருடத்தில் ஒருநாள் தரிசிக்கும் வகையிலான உதய அஸ்தமன சேவை டிக்கெட்டுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் நன்கொடை உதவியுடன் திருப்பதி மலையில் அனுமன் அவதரித்த இடத்தில் அவருடைய தாய் அஞ்சனா தேவிக்கு முழு அளவிலான ஆலயம் ஒன்றை ஏற்படுத்தவும், ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் நாத நீராஞ்சன மண்டபம் பகுதியில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    மேலும் படிக்க: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி 8-ம் நாள் உற்சவம்... முத்து கிரீடம் அணிந்து அழகாக வந்த பெருமாள்


    ஏழுமலையான் மீது 32,000 கீர்த்தனைகளை இயற்றிய தாளப்பாக்கம் அன்னமய்யா,  கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டையில் இருந்து திருப்பதி மலைக்கு வருவதற்காக பயன்படுத்திய நடைபாதை சமீபத்தில் புதிய நடைபாதை ஒன்றை ஏற்படுத்தவும்
    சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை சேதமடைந்துள்ள நிலையில் அதனை 3 கோடியே 60 லட்ச ரூபாய் செலவில் மராமத்து செய்யவும், சேதமடைந்துள்ள இரண்டாவது மலைப்பாதையை 3 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல், திருப்பதி மலையில் ஒப்பந்த அடிப்படையில் பக்தர்களுக்கு மொட்டை போடும் ஊழியர்களுக்கு தற்போது தலை ஒன்றுக்கு 11 ரூபாய் கட்டணம் வழங்கப்படுகிறது. அதனை 15 ரூபாயாக அதிகரிக்கவும்,கார்த்திகை தீப உற்சவம், ஸ்ரீனிவாச கல்யாணம் ஆகிய போன்ற பக்தி நிகழ்ச்சிகளை ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மட்டுமல்லாது நாட்டில் உள்ள மற்ற பெரு நகரங்களிலும் நடத்தவும்,
    3 கோடி ரூபாய் செலவில் திருப்பதி மலையில் உள்ள 50 ரூபாய் கட்டண தங்கும் அறைகளில் வாட்டர் ஹீட்டர்கள் பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை சமீபத்தில் உள்ள அன்னமய்யா டேம் பகுதியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக இடிந்து விழுந்து 6 கோவில்களை புனர்நிர்மாணம் செய்யவும்,
    திருப்பதி மலையில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் உண்டியல் பணம் கணக்கிடும் கட்டிடத்தில் சில்லறை நாணயங்களை கணக்கிட்டு பேக்கிங் செய்வதற்கான இரண்டு தானியங்கி இயந்திரங்களை வாங்கி பொருத்தமும்,
    ஸ்ரீசைலம் கோவிலில் உள்ள சிவாஜி கோபுரத்திற்கு ஸ்ரீசைலம் தேவஸ்தான நிதியில் தங்க தகடு பொருத்த தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும்  அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று அப்போது கூறினார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Tirumala Tirupati, Vaikunda ekadasi

    அடுத்த செய்தி