Home /News /spiritual /

வைகுண்ட ஏகாதசி: சொர்க்கவாசல் திறப்பு அன்று காலை 6 மணிவரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

வைகுண்ட ஏகாதசி: சொர்க்கவாசல் திறப்பு அன்று காலை 6 மணிவரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பார்த்தசாரதி கோவிலில் 13ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு உள்பிரகார புறப்பாடு, அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அதற்கு பிறகு அன்று காலை 6.15 மணி முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் படிக்கவும் ...
    வைகுண்ட ஏகாதசி தினமான ஜனவரி 13ம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்த சாரதி கோவிலில் காலை 4.15 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படும் என்றும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக காலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்து வருகிறது. வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு ஜனவரி 13ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 4.15 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படவுள்ளது.

    தமிழகத்தில் தற்போது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரையும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே சொர்க்க வாசல் நிகழ்வின்போது பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வுகளின்  முன்னேற்பாடுகளை செய்து வரும் உதவி ஆணையர் கவெனிதா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர். ராப்பத்து நிகழ்வு ஜனவரி 14ம் தேதி தொடங்கி ஜனவரி22ம் தேதி நிறைவடைகிறது. அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.  சொர்க்கவாசல் திறப்புக்கு முந்தைய நாளான12ம் தேதி  இரவு 8 மணியிலிருந்து 13ம் தேதி காலை 6 மணி வரை உபயதாரர்கள் உள்பட பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    இதையும் படிங்க: Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (ஜனவரி 08, 2022)


    13ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு உள்பிரகார புறப்பாடு, அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அதற்கு பிறகு அன்று காலை 6.15 மணி முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். யூ டியூப் மூலம் சொர்க்க வாசல்திறப்பு நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும்.
    65 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தரிசனத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும். பக்தர்கள் தேங்காய், பூ, பழம் மற்றும் துளசி கொண்டு வரவேண்டாம். இயல்பு நிலை திரும்பும் வரை கோவில் உள்பகுதியில் நடைபெறும் சாமி புறப்பாடு, உற்சவங்களில் பக்தர்கள், உபயதாரர்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. 500 போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபடவுள்ளனர் என்று தெரிவித்தார்.


    Published by:Murugesh M
    First published:

    Tags: Tamilnadu government, Temple, Vaikunda ekadasi

    அடுத்த செய்தி