ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு.. பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பங்கேற்பு!

திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு.. பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பங்கேற்பு!

திருப்பதி

திருப்பதி

Vaikunta Ekadashi | திருப்பதியில் இன்று நள்ளிரவு 12:05 க்கு ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati, India

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடாக நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஏழுமலையான் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன் பின் நடைபெற்ற சுப்ரபாத சேவையை மணி 12:05 க்கு வைகுண்ட வாசல் திறப்பு நடைபெற்றது. வைகுண்ட வாசல் திறக்கப்பட்டவுடன் உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வைகுண்ட வாசலில் எழுந்தருளினார். அவருடன் தேவஸ்தான ஜீயர்கள், அர்ச்சகர்கள்,அறங்காவலர் குழுவினர்,தேவஸ்தான உயர் அதிகாரிகள் ஆகியோர் முதலில் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்தனர்.

அதனை தொடர்ந்து உற்சவர்களுக்கு வைகுண்ட வாசலில் தூப தீப நைவேத்திய சமர்ப்பணம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து அதிகாலை 1.30 மணி முதல் மிக முக்கிய மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்து 300 ரூபாய் டிக்கெட் வாங்கிய 2000 பக்தர்கள் ஆகியோர் ஏழுமலையானை வழிபட்டு வைகுண்டவாசல் பிரவேசம் செய்தனர். பின் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வாங்கிய பக்தர்கள், இலவச தரிசன டோக்கன் வாங்கிய பக்தர்கள் ஆகியோர் ஏழுமலையானை வழிபட்டு வைகுண்ட வாசல் பிரவேசம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுமார் 4 டன் எடையுள்ள மலர்களால் ஏழுமலையான் கோவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஏழுமலையான் கோவில் வளாகம் முழுவதும் கண் கவர் சரவிளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், போக்குவரத்து ஆகிய அடிப்படை வசதிகளில் தடை ஏற்படாத வகையில் தேவஸ்தான நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் ஏழுமலையானின் தங்க தேரோட்டம் திருப்பதி மலையில் உள்ள கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி

First published:

Tags: Tirumala Tirupati, Tirupathi