Home /News /spiritual /

பூலோக வைகுண்டம் திருச்சி ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு - நேரடி காட்சிகள்

பூலோக வைகுண்டம் திருச்சி ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு - நேரடி காட்சிகள்

Youtube Video

பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

    108 வைண திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா, "பகல்பத்து திருமொழி, ராப்பத்து திருவாய்மொழி" என 21 நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படும். இதில் பகல்பத்து திருநாள் கடந்த 4ம் தேதி தொடங்கி 13ம் தேதி நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து ரத்தின அங்கியணிந்த நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, சொர்க்க வாசலுக்கு வந்தார்.

    சரியாக 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும், "ரங்கா... ரங்கா... கோவிந்தா... கோவிந்தா..." என அங்கிருந்தவர்கள் முழக்கமிட விண்ணதிர நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்தார். பிறகு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். சொர்க்கவாசல் திறக்கப்பட்டதையடுத்து, ராப்பத்து திருவிழாவின் முதல்நாள் நிகழ்வு தொடங்கியது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சொர்க்கவாசல் திறப்பின்போது கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் பணியாளர்கள் உட்பட வெகுசிலரே இருந்தனர். பொதுவாக மார்கழி மாதம் வளர்பிறையில்தான் சொர்க்கவாசல் திறக்கப்படும். இந்த முறை மார்கழி மாதம் போகி பண்டிகையின்போது ஏகாதசி வருவதால், ஸ்ரீரங்கம் கோயிலில் மட்டும் கார்த்திகை மாதமே சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.



    நம்பெருமாளை தரிசிக்க ஸ்ரீரங்கம் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 7 மணிக்கு அனுமதிக்கப்பட திட்டமிட்ட நிலையில் அதற்கு முன்பாகவே பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், சொர்க்கவாசல் வழியாக சென்றவர்கள் உற்சவரை தரிசனம் செய்தனர். இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோயிலை சுற்றி போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Srirangam, Trichy, Vaikunda ekadasi

    அடுத்த செய்தி