ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

வைகுண்ட ஏகாதசி.. பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி.. பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

சொர்க்கவாசல் திறப்பு

சொர்க்கவாசல் திறப்பு

Vaikunda ekadasi : சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

வைகுண்ட ஏகாதசி தினமான இன்று சென்னை  திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்த சாரதி கோவிலில் காலை 4.15 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. 

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்து வருகிறது. வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வாக இன்று காலை 4.15 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு அதிகாலையில் சிறப்பு தரிசனம் செய்தார். இந்த நிகழ்வில்  6 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் பஞ்சரங்க ஆலயங்களுள் ஐந்தாவது ஆலயமான திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு. பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது.ரத்தின அங்கியில் பெருமாள் எழுந்தருளி சொர்க்க வாசல் கதவு திறக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா 4:00 மணிக்கு மூலவர் திருமணத்துடன் தொடங்கியது வைகுண்ட ஏகாதேசி திருவிழாவில் சிறப்பு நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளது குறைவாக காணப்பட்டது.

பழனி

பழனி ஶ்ரீ இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்பட்டது. கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

திருவள்ளூர்

108 திவ்ய தேசங்களில் 59 வது திவ்யா தேசமான திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு சொர்க்கவாசல் வழியாக காட்சி அளித்தார்.

Must Read : போகி பண்டிகை: உற்சாகமாக கொண்டாடும் பொதுமக்கள்

அப்போது கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி பரவசத்துடன் கோ‌ஷமிட்டு தம்பதி சமேதராய் வந்த பெருமாளை வழிபட்டனர்.கொரனோ பரவல் என்பதால் பக்தர்களுக்கு வாசல் திறப்பின் போது அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்கள் அதிகாலை முதலே காத்திருந்து பெருமாளை வணங்கினர்.தொடர்ந்து மண்டபத்தில் உற்சவர் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

First published:

Tags: Chennai, Hindu Temple, Vaikunda ekadasi