Home /News /spiritual /

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி 2-ம் நாள் உற்சவம்... செளரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி 2-ம் நாள் உற்சவம்... செளரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்...

வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பர் 14ம்தேதி அதிகாலை 4.45 மணியளவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பர் 14ம்தேதி அதிகாலை 4.45 மணியளவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பர் 14ம்தேதி அதிகாலை 4.45 மணியளவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து திருவிழா 2-ம் நாள் உற்சவம் இன்று நடைபெற்றது. இதில் நம்பெருமாள் செளரி கொண்டை அலங்காரத்தில் அர்ச்சுனமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா ரெங்கா ரெங்கா என பக்தி பரவசத்துடன் தரிசனம். செய்தனர்.

    108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திருவிழா நேற்று முன்தினம் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

    21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் திருவாய்மொழி திருநாட்கள் எனப்படும் பகல்பத்து திருநாள் நேற்று தொடங்கியது.
    பகல்பத்து திருநாளின் இரண்டாம் நாளான இன்று காலை நம்பெருமாள் சவுரிகொண்டை, தங்க பஞ்சாயுத மாலை, திருமார்பில் மகாலட்சுமி பதக்கம், வைர அபயஹஸ்தம், நெல்லிக்காய் சரம், புஜகீர்த்தியில் ரெட்டை பட்சி பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி தங்கபல்லக்கில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.

    பாவத்தை போக்கி செல்வத்தை பெருக்கும் மூன்றாம் பிறை தரிசனம் இன்று!

    அதனைத் தொடர்ந்து அரையர் சேவை எனப்படும் அபிநயம், வியாக்யானம், பெரியாழ்வார் திருமொழி கேட்டருளிய அவர் பக்தர்களுக்கு பொதுஜன சேவை கண்டருளி வருகிறார்.
    பூலோக வைகுண்டப் பெருமாளை ரெங்கா, ரெங்கா ரங்கா என பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    முக்கிய திருநாளான வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பர் 14ம்தேதி அதிகாலை 4.45 மணியளவில் நடைபெறள்ளது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளார்: கதிரவன்

    மேலும் படிக்க... இந்த வார ராசிபலன் | நல்ல பலன்களை பெறப் போகும் ராசியினர் யார் தெரியுமா?
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Srirangam, Vaikunda ekadasi

    அடுத்த செய்தி