Home /News /spiritual /

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி 3-ம் நாள் உற்சவம்... அலங்கார கொண்டையுடன் காட்சியளித்த நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி 3-ம் நாள் உற்சவம்... அலங்கார கொண்டையுடன் காட்சியளித்த நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் பகல் பத்து 3ஆம் நாள் உற்சவத்தில், நம்பெருமாள் அலங்கார கொண்டையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து திருவிழா 3-ம் நாள் உற்சவம் இன்று நடைபெற்றது. இதில் நம்பெருமாள் அலங்கார கொண்டை அணிந்து அர்ச்சுனமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா ரெங்கா ரெங்கா... என பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    பெருமாள் திருமார்பில் அழகிய மணவாளன் பதக்கம், மகாலட்சுமி பதக்கம், வைர அபயஹஸ்தம், முத்துச்சரம், வைர ஒட்டியானம், காசு மாலை, ரத்தின திருவடி உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி மூலஸ்தானத்திலிருந்து இருந்து புறப்பாடு செய்தார். 

    தற்போது நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும் படிக்க... வைகுண்ட ஏகாதசி 2-ம் நாள்: ஸ்ரீரங்கம் பெருமாளின் அழகிய புகைப்படங்கள்...

    முக்கிய திருநாளான வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பர் 14ம்தேதி அதிகாலை 4.45 மணியளவில் நடைபெறள்ளது. இந்த விழா தொடர்ந்து 21 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: கதிரவன், திருச்சி.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Srirangam, Temple, Vaikunda ekadasi

    அடுத்த செய்தி