ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

வைகுண்ட ஏகாதசி: திருப்பதியில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம்

வைகுண்ட ஏகாதசி: திருப்பதியில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி ஆழ்வர் திருமஞ்சனம்

திருப்பதி ஆழ்வர் திருமஞ்சனம்

Tirupati | திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலுக்குஇன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்ற பெயரில் திருப்பதி ஏழுமலையான் கோவிலை ஒவ்வொரு ஆண்டும் நான்கு முறை அதாவது வைகுண்ட ஏகாதசி, வருடாந்திர பிரம்மோற்சவம், யுகாதி, ஆணிவாரா ஆஸ்தானம் ஆகிய நாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமையில் கழுவி சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமண கலவை பூசுவது வழக்கம்.

இந்த நிலையில் அடுத்த மாதம் இரண்டாம் தேதி வைகுண்ட ஏகாதசி திருநாள் நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய செவ்வாய்க்கிழமையான இன்று ஏழுமலையான் கோவிலுக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

அப்போது கோவில் கருவறை, தங்க கோபுரம், தங்க கொடிமரம், பிரசாத தயாரிப்பு கூடங்கள், பூஜை பாத்திரங்கள், பிரசாத தயாரிப்பு பாத்திரங்கள் ஆகியவை உள்ளிட்ட கோவில் மற்றும் அதில் உள்ள அனைத்து பொருட்களும் கழுவி சுத்தம் செய்யப்பட்டன.

தொடர்ந்து நாமக்கட்டி, புனுகு, ஜவ்வாது, சந்தனம் ஆகியவை உள்ளிட்ட சுகந்த திரவியங்களை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட நறுமணக்கலவை கோவில் சுவர்களுக்கு பூசப்பட்டது. தொடர்ந்து கோவில் ஜீயர்கள் புதிய பட்டு வஸ்திரங்களை ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தனர்.

செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி 

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati