நாளை வெள்ளி பிரதோஷம்... சிவ தரிசனம் சுக்கிர யோகம் தரும்...
நாளை வெள்ளி பிரதோஷம்... சிவ தரிசனம் சுக்கிர யோகம் தரும்...
சிவன்
Vaikasi Pradosham | ஒவ்வொரு கிழமைகளில் வருகின்ற பிரதோஷத்துக்கு ஒவ்வொருவிதமான பலன்கள் உண்டு. அப்போது பிரதோஷ நாளில், பிரதோஷ வேளையில் சிவனை தரிசிப்பதால் ஒவ்வொருவிதமான பலன்கள் கிடைக்கும்...
சிவபெருமானுக்கு உகந்த வழிபாடுகள் ஏராளம். மாதந்தோறும் வருகிற சிவராத்திரி சிவ வழிபாட்டுக்கு உகந்த அற்புதமான நாள். இந்த நாளில் விரதம் மேற்கொண்டு சிவ தரிசனம் செய்வார்கள் பக்தர்கள். திதிகளில் சிவனாருக்கு உரிய திதியாக திரயோதசி திதி போற்றி வணங்கப்படுகிறது. திரயோதசி திதி என்பது அமாவாசைக்கு முந்தைய மூன்றாவது நாளிலும் பெளர்ணமிக்கு முந்தைய மூன்றாவது நாளிலும் வரும். இந்த திரயோதசி திதியில் பிரதோஷ வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறும். மாதந்தோறும் இரண்டு பிரதோஷ நாட்கள் உண்டு. எந்தப் பிரதோஷத்தையும் தவறவிடாமல், சிவாலயம் செல்வதும் சிவ தரிசனம் செய்வதும் மகா புண்ணியம் என்கின்றன ஞானநூல்கள்.
அந்த நாளில், நந்திதேவரையும் வில்வம் சார்த்தி, அபிஷேகப் பொருட்கள் வழங்கி வழிபடுவது நமக்கும் நம் குடும்பத்தாரும் நம் சுற்றத்தாருக்கும் பல நல்லதுகளை, நல்ல விஷயங்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இந்த பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில் அனைத்துச் சிவாலயங்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
அப்போது நந்திதேவருக்கு பதினாறு வகையான அபிஷேகங்கள் நடைபெறும். சிவலிங்கத் திருமேனிக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பெருமாள் அலங்காரப் பிரியன், சிவபெருமான் அபிஷேகப் பிரியன். ஆகவே, லிங்கமே வடிவெனக் கொண்டு காட்சி தரும் சிவனாருக்கு அபிஷேகங்கள் குளிரக்குளிர செய்வது நல்லது.
அதிலும் வெள்ளி கிழமையில் வரும் பிரதோஷம் விஷேசமானது. நாளை வைகாசி மாதம் வெள்ளிக் கிழமை பிரதோஷம். சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று சிவனாருக்கு நடக்கும் பூஜைகளை தரிசிக்க வேண்டும். இதனால், உறவு வளப்படும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். சுக்கிர யோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.