வேத ஜோதிட அடிப்படையில், மாதப் பிறப்பு என்பது சூரியன் எந்த ராசிக்குச் செல்கிறது என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. மேஷத்தில் சூரியன் உச்சம் பெற்று பெயர்ச்சி ஆவது தான் சித்திரை மாதப் பிறப்பாகவும், தமிழ் வருடப்பிறப்பு என்றும் கொண்டாடப்படுகிறது. மேஷத்தில் இருந்து இரண்டாவது ராசியான, ரிஷப ராசிக்கு சூரியன் பெயர்ச்சி ஆவது வைகாசி மாதப் பிறப்பை குறிக்கும். மேஷ ராசியில் சூரியன் உச்சம் பெற்றிருந்தாலும், கடந்த ஒரு மாத காலமாக ராகுவுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ராகுவின் பிடியிலிருந்து விலகி, சுக்கிரனின் வீடான ரிஷபத்துக்கு சூரியன் பெயர்ச்சி ஆகிறது. வைகாசி மாதம் முழுவதும் சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பார். வைகாசி 2022 மாத பலன்களை பார்க்கலாம்.
மேஷ ராசிக்கு சுப விரயம்
மேஷ ராசியினருக்கு சனி லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் நிறைய அனுகூலங்கள் ஏற்படும். கடந்த மாதத்தை விட தற்போது கூடுதல் தைரியம் மற்றும் நம்பிக்கையோடு செயல்படுவீர்கள். இருப்பினும் குடும்பத்தில் கொஞ்சம் அனுசரித்து விட்டு கொடுத்து செல்லும் தன்மை தேவைப்படும். குரு 12 ல் மறைந்திருப்பதால் மறைமுக செலவுகள் அல்லது விரயம் ஏற்படும் எனவே விரயத்தை சுபவிரயமாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.
பரிகாரம்: சிவபெருமான் வழிபாடு மற்றும் அஷ்ட லட்சுமி வழிபாடு ஆகிய இரண்டுமே நல்ல பலன்களைத் தரும் அதுமட்டுமின்றி தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது உடல் உபாதைகளில் இருந்து பாதுகாக்கும்.
ரிஷப ராசிக்கு அனுகூலமான மாதம்
ரிஷப ராசி அன்பர்களுக்கு சுக்கிரன், குரு மற்றும் சனி ஆகிய அனைத்து கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் இந்த மாதம் எல்லா வகையிலும் அனுகூலமாகவும் யோகமாகவும் இருக்கும். நல்ல வாய்ப்புகள் ரிஷப ராசி நேயர்களை தேடி வரும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் விலகி சுமுகமான நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தின் மீது மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.
பரிகாரம்: செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் துர்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி வரலாம் அதேபோல சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்.
மிதுன ராசியினர் தைரியமாக போராட வேண்டும்
மிதுன ராசி நேயர்களுக்கு எடுக்கும் முயற்சியில் மனம் தளராமல் எப்படியாவது நிறைவேற்ற வேண்டும். குடும்பம் மற்றும் உறவுகளுக்கு இடையே இருந்த கசப்புகள் விலகி மகிழ்ச்சி நிறையும். பண வரவு சிறப்பாக இருக்கும். இருந்தாலும் செலவினங்கள் ஏற்படும். எனவே செலவுகளை கண்டிப்பாக குறைக்க வேண்டும். அதே போல உணவு விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாடாக இருக்க வேண்டும்.
பரிகாரம்: புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயம் ஆலயத்திற்குச் சென்று நெய் விளக்கு ஏற்றி வரலாம் விரதமிருந்து வழிபாடு செய்யலாம்.
கடக ராசியினருக்கு செலவுகள் குறையும்
கடக ராசியினருக்கு இந்த மாதத்தில் குரு புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கலுமே மிகவும் சாதகமான இடத்தில் சஞ்சரிப்பதால் பண வரவு உண்டாகும். நெருக்கடிகள் குறையும், பொருளாதார நிலை மேம்படும். செலவுகளும் கட்டுக்குள் வரும். வாகனத்தில் செல்லும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.
பரிகாரம்: செவ்வாயன்று முருக வழிபாடும், வியாழன் அல்லது சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது தடைகளை நீக்கி சுபத்தை உண்டாக்கும்.
சிம்ம ராசியினருக்கு நிதானம் தேவை
இந்த மாதம் சனி, குரு மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று முக்கிய கிரகங்களுமே உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கொஞ்சம் நிதானமாக நடக்க வேண்டும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும், பண வரவு தாமதமாகும். தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்: பெருமாள் மற்றும் மகாலட்சுமியை வழிபட்டுவருவது தடைகள் தாமதங்களை நீக்கி ஐஸ்வர்யத்தை அதிகரிக்கும்.
Also see...எண் கணித பலன் : இந்த தேதியில் பிறந்தவர்கள் உணவு தானம் செய்ய வேண்டும்..
கன்னி ராசிக்கு நன்மைகள் உண்டாகும்
கன்னி ராசி நேயர்களுக்கு செவ்வாய் மற்றும் குரு சாதகமான பலன்களை அளிக்கும். ராகுவுடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் சூரியன் ராகுவின் பிடியிலிருந்து விலகுவது பெரிய நிம்மதியை ஏற்படுத்தும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். பொருளாதார ரீதியாக முன்னேற்றங்கள் காணுவீர்கள். தேவையற்ற பயணங்களைத தவிர்ப்பதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம்.
பரிகாரம்: ராகு காலத்தில் துர்கையம்மன் வழிபாடும் சிவபெருமான் வழிபாடும் தொடர்ந்து செய்து வருவது குடும்பத்தில் சுபிட்சத்தை அதிகரிக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rasi Palan