ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

வைகாசி மாதத்தின் சிறப்புகள்...

வைகாசி மாதத்தின் சிறப்புகள்...

முருகன்

முருகன்

Vaikasi Month | உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி மாதம். இளவேனில் எனும் வசந்த காலம் இது. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். வைகாசி மாதத்துக்கு மட்டுமே இந்தச் சிறப்பு உண்டு.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  வளம் தரும் வைகாசி மாதத்தை ’மாதவ மாதம்' என்றும் வைகாசம் என்று போற்றுவர். வைகாசி முதல் தேதியில் கங்கை நதியில் நீராடினால் ஏழேழு ஜென்மங்களில் செய்த பாபங்கள் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. வைகாசி என்பதை விசாகம் என்றும் சொல்வர். விசாகம் என்றால் " மலர்ச்சி' என்று பொருள். வைகாசிதான் சமஸ்கிருதத்தில் வைசாகம் ஆனது. இம்மாதத்தில் புனித நதியில் நீராடி மஹாவிஷ்ணுவை துளசி இலைகளால் பூஜை செய்தால் நற்பேறுகள் பல பெறலாம் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.

  1. மேலும் வைகாசி மாதத்தில் பல அவதாரங்கள் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியானது ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் தோன்றியது.

  2. வைகாசி சுக்ல சதுர்த்தசியில்தான் மஹாவிஷ்ணு தன் பக்தன் பிரகலாதனுக்காக ஒரு நொடிப்பொழுதில் நரசிம்ம அவதாரம் எடுத்தார்.

  3. கௌதம புத்தர் அவதரித்தது ஓர் வைகாசி பௌர்ணமி என்று வரலாறு சொல்கிறது. அவர், கயாவில் போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும் வைகாசி பௌர்ணமியே ஆகும்.

  4. வைகாசி மாத மூலநட்சத்திர நாள் திருஞானசம்பந்தரின் திருநட்சத்திர தினம். அன்று ஆச்சாள் புரத்தில் திருஞானசம்பந்தர் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

  5. நம்மாழ்வார், திருக்கோட்டியூர் நம்பிகள் அவதரித்த மாதம் வைகாசி.

  6. காஞ்சி மகாபெரியவர் அவதரித்ததும் வைகாசி பௌர்ணமியே. ஆதிசங்கரர் தோன்றியது வைகாசி பஞ்சமி.

  Also see... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விழா நாளை தொடக்கம்...

  7. வைகாசி பௌர்ணமியன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்ம ராகக் கற்களாலான மாலை அணிவித்து, எள்சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாபங்கள் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

  8. வைகாசி மாதம் சிவபெருமானை போற்றி கடைப்பிடிக்கப்படும் விரதம் ரிஷப விரதம் ஆகும்.

  9.  வைகாசி விசாகத்தில் எமதர்மராஜன் அவதரித்ததாக புராணம் கூறுகிறது. ஆகையால் எமதர்மராஜன் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வாஞ்சியம் மற்றும் திருச்சி மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள திருப்பைஞ்ஞீலி திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

  10. தமிழ் கடவுள் முருகன் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தார்...

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Murugan