Home /News /spiritual /

வைகாசி மாத சிவராத்திரியின் சிறப்புகள்

வைகாசி மாத சிவராத்திரியின் சிறப்புகள்

சிவன்

சிவன்

Sivaratiri | மாத சிவராத்திரி நாளில், முடிந்தால் விரதம் மேற்கொள்ளுங்கள். விரதம் இருப்பதை விட தானம் செய்வது உயர்ந்தது.

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி எந்த நாளில் வருகிறதோ அதை சிவராத்திரி என்கிறோம். இதைதான் மாத சிவராத்திரி என்பர். மாசிமாதம் வரும் சிவராத்திரி மஹாசிவராத்திரி ஆகும். அதுபோல வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமியில் வரும் சிவராத்திரியும் சிறப்பு வாய்ந்தது. சூரியன் ஈசனை வழிபட்டது இந்த வைகாசி மாதத்தில்தான். 

    மாதந்தோறும் வரும் சஷ்டி போல, ஏகாதசி போல, சிவராத்திரி விரதமும் வரும். சிவனாரை வணங்குவதற்கு உரிய அற்புதமான நன்னாள். இந்தநாளில், சிவராத்திரி விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வது நல்லது.

    சிவனை மகாசிவன் என்று அழைப்பது இல்லை. அதே சமயம் சிவராத்திரியை ‘மகா’ எனும் அடைமொழியுடன் அழைக்கிறோம். இதில் இருந்தே இந்த இரவின் மகிமையை அறியலாம். அதே போல், ஈசனை சதாசிவன் என்று சொல்கிறோம். வேறு எந்த தெய்வத்தையும் ‘சதா’ சேர்த்துச் சொல்வதில்லை. ‘சதா’ என்றால் ‘எங்கும் எப்போதும்’ என்று அர்த்தம். எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன் ஈசன்.

    நாளை சனிக்கிழமை மாத சிவராத்திரி, வைகாசி மாத சிவராத்திரி. இந்த அற்புதமான இந்த நாளில், காலையும் மாலையும் சிவனாரை வழிபடுவது சிறந்தது. அதேபோல், ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையும் பிரதோஷம் வரும். அமாவாசைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும் பெளர்ணமிக்கு மூன்றுநாட்களுக்கு முன்னதாகவும் பிரதோஷம் வரும். திரயோதசி திதியன்று வருவதே பிரதோஷம். இந்தநாளில், சிவ வழிபாடு செய்வதும் பசுக்களுக்கு உணவளிப்பதும் மிகுந்த விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    சிவனனுக்கு உகந்த சிவராத்திரியும் பிரதோஷமும்ஒரேநாளில் அமைவது கூடுதல் சிறப்பு. சேர வருகிறது. இந்த வீரியமுள்ள நாளில், காலை மற்றும் மாலை வேளையில் வீட்டில் விளக்கேற்றுங்கள். சிவ ஸ்துதி சொல்லுவது அல்லது கேட்பது நல்லது.

    Also see... மஹா சிவராத்திரி தோன்றிய வரலாறு தெரியுமா?

    மாத சிவராத்திரி நாளில், முடிந்தால் விரதம் மேற்கொள்ளுங்கள். விரதம் இருப்பதை விட தானம் செய்வது உயர்ந்தது. எனவே, இந்தநாளில், ஒரு நாலுபேருக்கேனும் உணவு அளியுங்கள். அதனால் இதுவரை தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களில் இருந்து விடுபடலாம்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Sivan

    அடுத்த செய்தி