ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

வைகாசி மாத ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்... துலாம் முதல் மீனம் வரை ( மே 15 முதல் ஜூன் 15 வரை)

வைகாசி மாத ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்... துலாம் முதல் மீனம் வரை ( மே 15 முதல் ஜூன் 15 வரை)

ராசி பலன்

ராசி பலன்

Vaikasi month Rasi Palan 2022 | வைகாசி மாதம் முழுவதும் சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பார். வைகாசி 2022 மாத பலன்களை பார்க்கலாம்...

துலாம் ராசியினர் பொறுமை அவசியம்

இந்த மாதம் பெரும்பாலான கிரகங்கள் உங்கள் ராசிக்கு ஆறு மற்றும் எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் நெருக்கடியான மாதமாக இருக்கும். அலைச்சல், தடை, தாமதம், இடையூறு ஆகியவை ஏற்படக்கூடும். சில நாட்களுக்கு எல்லாவற்றிலும் கொஞ்சம் அனுசரித்து செல்வது நல்லது. பண ரீதியான பிரச்சினைகள் மற்றும் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பேச்சில் பொறுமை முக்கியம். புதிய முயற்சிகளை தள்ளி போடுங்கள்.

பரிகாரம்: ஒவ்வொரு வியாழக்கிழமையும் குருபகவான் அல்லது தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது, கொண்டைக்கடலை மாலையாக அல்லது பிரசாதம் சேது, விளக்கேற்றி வருவது நன்மைகளை அளிக்கும்.

விருச்சிக ராசியினருக்கு நினைத்ததெல்லாம் நடக்கும்

விருச்சிக ராசியினருக்கு நினைப்பதெல்லாம் நடக்கும் மாதம் இது. குடும்பம், வேலை, புதிய முயற்சி, சுபகாரியங்கள் என்று எல்லாமே சாதகமாகத்தான் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவுகள் இருக்கும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பரிகாரம்: வாழ்வில் மேலும் வளம் மற்றும் முன்னேற்றம் பெறுவதற்கு சனி பகவானுக்கு சனிக்கிழமையன்று நீல நிற பூக்கள் அல்லது கருப்பு வஸ்திரம் சார்த்தி தீபம் ஏற்றி வழிபடவும்.

தனுசு ராசிக்கு தடைகள் விலகும்

தனுசு ராசிக்கு ஏழரைச்சனி விலகி தற்போது அதிசாரமாக இருக்கும் சனிப்பெயர்ச்சியும் மிகச்சிறப்பான பலன்கள் தரும். பொருளாதார ரீதியாக இதுநாள் வரை இருந்த தடை விலகி எல்லா முயற்சிகளுமே சாதகமான பலன்களைத் தரும். இருப்பினும் ஆடம்பர மற்றும் தேவையில்லாத செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: ராகு பகவான் மற்றும் சனி பகவானுக்கு விளக்கேற்றி வழிபட்டு வருவது வாழ்வை மேம்படுத்தும்.

மகர ராசியினர் கவனம் தேவை

இந்த மாதம், சூரியன், செவ்வாய் மற்றும் சனியால் கொஞ்சம் நிம்மதி குறைவும், கருத்து வேறுபாடும் ஏற்படும். பேச்சில் கவனமும் நிதானமும் அவசியம். உறவினர்களுடன் சங்கடங்களை தவிர்க்க வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொஞ்சம் மந்தமாக இருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பரிகாரம்: சிவபெருமான் மற்றும் நந்தி வழிபாடு, பிரதோஷத்தன்று வழிபாடு செய்து வருவது நல்ல மாற்றத்தைக் கொண்டுவரும்

கும்ப ராசியினருக்கு பொருளாதார மேம்பாடு

இந்த மாத கிரக அமைப்புகள் உங்களுக்கு குடும்பம் மற்றும் பொருளாதார ரீதியான மேம்பாட்டை அளிக்கும். அதே நேரத்தில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது அவசியம். உணவுக் கட்டுப்பாடும், உடல் ஆரோக்கியத்தில் கவனமும் தேவை. தொழிலில் மறைமுக எதிரிகள் மற்றும் போட்டிகள் இருக்கும்.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை செய்வது மற்றும் சனி பகவானுக்கு எள்தீபம் ஏற்றி வருவது வாழ்க்கையை மேம்படுத்தும்.

மீன ராசியினர் செலவைக் குறைக்க வேண்டும்

உங்கள் ராசிக்கு ராகு இரண்டாம் வீட்டில் இருப்பதால், பொறுமையாக இருக்க வேண்டும். செலவுகளைக் குறைப்பதும் அவசியம். மாதத்தின் பிற்பகுதியில் காரியத் தடை விலகும். தனவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அனுசரித்து செல்ல வேண்டும். தொழில் மற்றும் வேலையில் மற்ற விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: துர்கை அம்மன் வழிபாடு வாழ்வில் துன்பங்களை நீக்கும்.

First published:

Tags: Rasi Palan