இன்று வைகாசி வளர்பிறை சதுர்த்தி... விநாயகர் வழிபாடு அற்புத பலன்களை தரும்...
இன்று வைகாசி வளர்பிறை சதுர்த்தி... விநாயகர் வழிபாடு அற்புத பலன்களை தரும்...
விநாயகர்
Vaikasi month Chaturthi | சதுர்த்தி தினங்களில் வழிபட்டால் நாம் பெறாத நன்மைகளே இல்லை எனக் கூறலாம். அந்த வகையில் சிறப்பான வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தி தினமான இன்று விநாயகரை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வருவது சங்கடஹர சதுர்த்தி எனவும், அமாவாசை தினத்திற்கு நான்காவதாக வருவது சதுர்த்தி தினம் எனப்படுகிறது. இந்த இரண்டு சதுர்த்தி தினங்களும் விநாயகர் பெருமானை வழிபடுவதற்குரிய சிறந்த தினமாக இருக்கிறது. அதிலும் முருக வழிபாட்டிற்குரிய மாதமாக இருக்கும் வைகாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி தினத்தில் விநாயக பெருமானை வழிபடுவதால் நன்மைகள் பல உண்டாகிறது.
வழிபடும் முறை
வைகாசி வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, உணவு ஏதும் உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகப்பெருமானுக்கு விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட்டாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிடலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கோ அல்லது அவரது சன்னதிக்கோ சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனை, பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும்.
வழிபாடு முடிந்ததும் ஆலயத்தை எட்டு முறை வலம் வர வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளலாம்.
பலன்கள்
வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தி உடல் நல குறைபாடுகள் நீங்க விநாயகருக்கு விரதம் இருந்து வழிபடுவதற்குரிய ஒரு சிறந்த திதி ஆகும். இத்தினத்தில் மேற்கூறிய முறையில் விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய்கள் நீங்க பெறுவீர்கள்.
குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்படுவது நீங்கும். வீட்டில் நிம்மதியற்ற நிலை மாறி அமைதி, மகிழ்ச்சி நிலவும். பிறரோடு ஏற்பட்ட பகைமைகள் நீங்கி சமரசம் ஏற்படும். சுப காரிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிபெறும்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.