ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

வைகாசி மாத சதுர்த்தி விரதம் இன்று... விநாயகரை வணங்கினால் பிரச்சனைகள் தீரும்... (மே 19, 2022)

வைகாசி மாத சதுர்த்தி விரதம் இன்று... விநாயகரை வணங்கினால் பிரச்சனைகள் தீரும்... (மே 19, 2022)

பிள்ளையார்

பிள்ளையார்

Vaikasi month Chaturthi | சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும் என்பது நம்பிக்கை...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் வளர்பிறை சதுர்த்தியை "வர சதுர்த்தி" என்றும் கிருஷ்ண பட்சம் தேய் பிறை சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி" என்றும் கூறுவார்கள். ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும். வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்று ஜோதிடர்கள் சொல்லுகின்றனர்.. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அந்த வகையில் இன்று தேய்பிறை சதுர்த்தி...

ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது நற்பலன்களைத் தரக்கூடியது. சங்கடம் என்றால்  கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள். பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.  நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். அந்த நாளில் காலையிலிருந்து விரதம் இருந்து விநாயகரை மனதில் நினைத்து துதிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் நிவேதனம் செய்த உணவை உண்ணலாம்...

Also see... வெற்றிதரும் வெள்ளேருக்கு விநாயகர் வழிபாடு!

இந்த விரதத்தை விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹரசதுர்த்தி வரை உறுதியுடன் கடை பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், குழந்தை பாக்கியம் என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும் என்பது நம்பிக்கை

First published:

Tags: Hindu Temple